குவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு!

357

குவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில் பரவி வருகிறது. குவைத்தில் இதுவரை 148 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை இடப்பட்டுள்ளதாக குவைத் அரசின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல் முஜ்ராம் வியாழக்கிழமை அன்று தெரிவித்தார். மேலும் இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை அரசு சரி செய்யும் என்றும் தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ள தாரிக் அல் முஜ்ரம், பெற்றோர் மீதமுள்ள பள்ளி கட்டணங்கள் கட்ட நேரிடாது என்றும் தெரிவித்தார்.

இதைப் படிச்சீங்களா?:  சுற்றுலா பயணிகள் வரலாம் - கோரன்டைன் தேவையில்லை!

முன்னதாக மார்ச் 25 ஆம் தேதிவரை மட்டுமே விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை என்பதல் மேற்கண்ட அறிவிப்பை குவைத் அரசு வெளியிட்டுள்ளது.