லாக்டவுன் காலத்தில் சாதித்த மாணவி ஆமினா முஹம்மது – வீடியோ இணைப்பு!

Share this News:

ஜித்தா (15 ஜன 2021): புனித நூலான திரு குர்ஆனின் எழுத்துக்களையும் மக்காவின் (கஃபா) கிஸ்வா அரபி எழுத்துக்களையும் வனப்பெழுத்து (Calligraphy) மூலம் வடிவமைத்து சாதித்துள்ளார் மாணவி ஆமினா முஹம்மது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமினா முகமது, சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஓவியம் எதுவும் முறையாக பயிலாத நிலையில் கோவிட் காலத்தின் லாக்டவுன் நேரத்தில்தான் அமீனா யூடியூப் மூலம் அரபி மொழியின் வனப்பெழுத்து (Calligraphy) வரைவதை கற்றுக் கொண்டார்.

அதன்படி புனித குர்ஆனின் வசனங்கள், மற்றும் மக்காவில் உள்ள புனித காபாவின் நுழைவாயிலின் கையெழுத்து ஆகியவற்றை வரைந்து அமினா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Share this News:

Leave a Reply