1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?

Share this News:

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?

கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்:

1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள்.

2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள்.

அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள்

ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள்

இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள்

3. இதில், 1987 ஜூலை 1 க்கு முன்னர் பிறந்தவர்களுக்குப் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்ட் ஆகிய இரண்டில் ஒன்று இருப்பதை உறுதிபடுத்துங்கள். எனில், இவர்கள் பிறப்பின் அடிப்படையில் நேரடியாக இந்தியர்கள். வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

4. 1987 ஜூலை 1 க்குப் பின்னர் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா என உறுதிபடுத்துங்கள். இருக்கிறது எனில்,

அ. 1987 ஜூலைக்கும் 2004 டிசம்பருக்கும் இடையில் பிறந்தவர்கள் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியர் என்பதை உறுதிபடுத்துங்கள். அதாவது அவர்களின் பெற்றோரில் யாராவது ஒருவர் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்டில் இருக்கும் பெயர் அவர்களின் பிறப்பு சான்றிதழில் இருப்பது போல் இருக்கிறதா என்பதை உறுதி படுத்துங்கள். எனில், இவர்களும் வம்சாவழி அடிப்படையில் இந்தியர். வேறு சான்று தேவையில்லை.

2004 டிசம்பருக்குப் பின்னர் பிறந்தோரின் பெற்றோர் இருவருமே இந்தியராகவும் அவர்களின் சான்றில் பெயர்கள் சரியாக ஒத்துப்போகவும் வேண்டும். எனில், இவர்களும் வம்சாவழியில் இந்தியர். வேறு சான்று தேவையில்லை.

மேற்கண்ட அடிப்படையில் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் செக் செய்து, பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்று இல்லாதவர் லிஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

பாஸ்போர்ட் எடுக்க, ஏதேனும் ஆதார்/ரேசன் கார்டு ஏதாவது சப்மிட் செய்து பாஸ்போர்ட் எடுங்கள். இது எளிது.

பிறப்புச் சான்று எனில்,

1. மருத்துவமனையில் பிறந்தவராக இருந்தால், அந்த மருத்துவமனை இருக்கும் ஏரியா கிராம/தாலுகா/கார்ப்பரேசன் அலுவலகத்துக்குச் சென்று விவரம் கூறி அப்ளை செய்யுங்கள். 200 ரூபாய்தான் செலவு. இலகுவாக கிடைக்கும்.

2. வீட்டில் பிறந்தவராக இருந்தால்,

பிறப்பு சான்று இல்லை என்பதற்கு ஒரு அஃபிடவிட் நோட்டரி அட்டஸ்டேசனுடன் தயார் செய்து உங்கள் கிராம/தாலுக்/கார்ப்பரேசன் அலுவலகத்தில் சப்மிட் செய்யுங்கள். அவர்கள் பிறப்பு சான்று இல்லை என்பதற்கான ஒரு சான்று தருவர். அதனைக் கொண்டு மாவட்ட நீதிமன்றத்தில் சப்மிட் செய்யுங்கள். அபராதம் கட்டச் சொல்வார்கள். ஆண்டுக்கு 200 ரூபாய். கிடைத்துவிடும்.

அவ்வளவுதான்.

அபூ சுமையா


Share this News:

Leave a Reply