நாங்கள் இந்தியர்கள் என்பதில் பெருமை – இம்ரான்கானுக்கு அசாதுத்தீன் உவைசி சரமாரி பதில்!

புதுடெல்லி (05 ஜன 2020): இந்தியர்கள் என்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம், பாகிஸ்தானைப் பற்றி மட்டும் இம்ரான்கான் கவலை படட்டும் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துவதாக ஒரு வீடியோவை பதிவு செய்து இந்திய அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு உத்தரப்பிரதேச போலீசார் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து இம்ரான் கான் பதிவு செய்த வீடியோக்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் பதிவு செய்யப்பட்டது என்றும், போலியாக இந்த வீடியோவை பதிவு செய்து இந்தியா மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டுவதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த வீடியோவை இம்ரான்கான் நீக்கிவிட்டார்.

இந்நிலையில் இந்த வீடியோ பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாதுத்தீன் உவைசி, “இந்திய முஸ்லீம்கள் பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலைப்பட வேண்டாம். சொந்த நாட்டைப் பற்றி மட்டும் இம்ரான்கான் கவலைப்பட்டால் போதும். ஜின்னாவின் தவறான கொள்கையை நிராகரித்து விட்டதாகவும், இந்திய முஸ்லீம்களாக இருப்பதை பெருமையாக கருதுகிறோம். அப்படியே இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....