டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!

Share this News:

டோக்கியோ (04 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துசண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

பெண்கள் குத்துசண்டை 69 கிலோ – இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் அரை யிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார். முதல்நிலை வீராங்கனையான துருக்கி நாட்டின் சுர்மெனெலியுடன் அரையிறுதிப் போட்டியில் லவ்லினா மோதினார்.

முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது. காலிறுதிப் போட்டியில், லவ்லினா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியான் சின் சேன்னைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்து உள்ளது.

இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரு தங்கம் இரு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் இந்த ஒலிம்பிக்கில் கிடைத்துள்ளது.

23 வயதான லவ்லினா அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்; அர்ஜூனா விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது!


Share this News:

Leave a Reply