நாங்களெல்லாம் அப்படியில்லை – இப்போதைய கிரிக்கெட் வீரர்களை வறுத்தெடுக்கும் கபில்தேவ்!

Share this News:

மும்பை (01 ஜூலை 2021): இப்போதைய கிரிக்கெட் வீரர்கள் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிசிசிஐ அணி தோற்றது, பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்திய பவுலர்கள் பவுலிங் திறன் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனையுடன் விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “”நான் நினைப்பது என்னவென்றால், நீங்கள் ஒரு வருடத்தில் 10 மாதம் கிரிக்கெட் விளையாடும்போது, நீங்கள் அதிக காயங்களுக்கு ஆளாக நேரிடும். இன்றைய கிரிக்கெட் மிகவும் அடிப்படை நிலையிலேயே உள்ளது. பேட்டிங் அல்லது பவுலிங் மட்டும் செய்து ஒப்பேற்றிவிடலாம். ஆனால், எங்கள் காலத்தில், நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. இன்று கிரிக்கெட் மாறிவிட்டது. சில நேரங்களில் ஒரு வீரர் நான்கு ஓவர்கள் வீசிய பிறகு சோர்வடைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மேலும் அவர்களை மூன்று அல்லது நான்குக்கு மேல் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை என்று கேள்விப்பட்டேன். இப்படி இருந்தால் என்ன செய்வது?

எனக்கு நினைவிருக்கிறது, எங்கள் காலத்தில் கடைசியாக வந்து வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும் வீரர்களுக்கும் 10 ஓவர்கள் வீசுவோம். அந்த மனநிலையை அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அறிவுறுத்தியது. இன்றைய தலைமுறையினர் நான்கு ஓவர்கள் வீசிவிட்டு சைலன்ட் ஆவதை பார்க்கும் போது, எங்களுக்கு அதி விசித்திரமாக உள்ளது” என்று கபில் தேவ் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply