சிறு வியாபாரி தந்தைக்கும் வீட்டுப் பணிப்பெண் தாய்க்கும் பிறந்த மொராக்கோ வீரர் ஹக்கீமி!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது.

ஜாம்பாவான்களை வெளியே அனுப்பிவிட்டு மொராக்கோ அணி அரையிறுதிக்குள் நுழைந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் 24 வயது அஷ்ரஃப் ஹக்கீமி குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய காலிறுதி முந்தைய போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக பெனால்டி சூட்டில் கோல் அடித்து மொராக்கோ காலிறுதிக்குள் நுழைய மிக முக்கிய காரணமாக இருந்தார் ஹக்கீமி. அந்த வெற்றிக்குப் பிறகு பார்வையாளராக இருந்த தனது தாயிடம் வெற்றியை பகிர்ந்து கொண்ட புகைப்படம் வைரலானது.

8 வயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக காணப்பட்ட ஹக்கீமியின் தந்தை தெருவோர கடையில் வியாபாரம் செய்து வந்தவர். அவரது அம்மா வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தியவர். தற்போது கால்பந்து ரசிகர்களின் முக்கியமாக இளைஞர்களின் ரோல் மாடலாகா காட்சி தருகிறார்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...