பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி!

புதுடெல்லி (24 நவ 2021): பிசிசிஐ அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அசைவ உணவுகளில் ஹலால் உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மறுபுறம் எதிரணியான நியூசிலாந்து அணி நிர்வாகம், தங்களது உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி கட்டாயம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலின் படி, கோழி இறைச்சியும் ஆட்டு இறைச்சியும் மட்டுமே அசைவ உணவுகளாக உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...