சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாசிட்டிவ் – ரசிகர்கள் கவலை!

மும்பை (27 மார்ச் 2021): கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:-

சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன்.

எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த சாலை விழிப்புணர்வு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் கேப்டனாக பங்கேற்றார். இதில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...