தமிழக வீரர் ஷாருக்கானுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்!

Share this News:

அஹமதாபாத் (06 பிப் 2022) இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷாரூக்கான் சேர்க்கப் பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இப்போது முதலாவது ஒரு நாள் போட்டிக்கான இந்திய பிசிசிஐ அணியில் ஷாருக்கான் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஷாருக்கான் சிறப்பாக ஆடி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply