நவீன தொழில்நுட்பத்தில் கலக்கும் கத்தார்!

கத்தார் (06 டிசம்பர் 2022): தோஹாவில் நடைபெற்றுவரும் உலகக் கால்பந்து போட்டியில், விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, கால்பந்துக்குள் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

FIFA World Cup Qatar 2022 போட்டிக்காக, நாடு முழுக்க பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருவதில், கத்தார் முன்னணி வகிக்கிறது.

விளையாட்டு நடந்து கொண்டிருக்கும்போதே, ஆஃப் ஸைடு முடிவுகளை கத்தார் ஒளிபரப்பும் video assistant referee (VAR) system பலரின் புருவத்தை உயர்த்தி இருக்கிறது.

இது எவ்வாறு சாத்தியமாகிறது?

AI தொழில்நுட்பம் பயன்படுத்தி, செமி ஆட்டோமேட்டட் டெக்னாலஜி மூலம் விளையாடிக் கொண்டிருக்கும் கால்பந்திற்குள் சென்ஸார்களை வைத்து, ஒவ்வொரு மைக்ரோ மில்லி மீட்டரும் கண்காணிக்கப்படுகிறது.

இதனால், ஆட்ட நடுவரால் (referee) நியாயமான துல்லியமான தீர்ப்பை வழங்க முடிகிறது.

இப் புதிய தொழில்நுட்பம் வெற்றிபெற்று, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளதால், இதனை இனிவரும் ஒவ்வொரு விளையாட்டிலும் புகுத்த பல்வேறு நாடுகள் முன் வந்துள்ளன.

ஹாட் நியூஸ்: