அதானி மோசடி விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்!

புதுடெல்லி (03 பிப் 2023): அதானி பங்குச்சந்தை மோசடி சர்ச்சையை எதிர்த்து இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹைபி ஈடன், டி.என்.பிரதாபன், பென்னி பஹானன் ஆகியோர் லோக்சபாவில் அவசர தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதானி பங்கு சர்ச்சை குறித்து விவாதம் நடத்தக் கோரி ராஜ்யசபாவில் ஏ.ஏ.ரஹீம் எம்.பி நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால் அவசர மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சியினர் முழக்கங்களை…

மேலும்...

அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ வழங்கிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி (03 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததை அடுத்து 6வது நாளாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த 5 நாட்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் அதாவது ரூ.1,338 சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 15-வது இடத்திற்கு சரிந்துள்ளார்….

மேலும்...

அதானி குழும நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி உத்தரவு!

புதுடெல்லி (02 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதா? என அறிய விசாரணை நடத்த வேண்டி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை…

மேலும்...

அதானிக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்ச்சி!

புதுடெல்லி (19 ஜூன் 2021): தொழிலதிபர் அதானிக்கு 5 நாட்களில் அதானிக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆசியாவின் 2வது மிகப்பெரிய தொழில் பணக்காரரான கெளதம் அதானியின் நிறுவன பங்குகளில் 5 நாட்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கெளதம் அதானி குழுமத்தில் சுரங்கங்கள், மின் நிலையங்கள், விமான நிலையங்கள், சூரிய மின்சக்தி நிறுவனங்கள், எரிவாயு நிலையங்கள் என பல்வேறு தொழில்…

மேலும்...