அதிமுகவில் அடுத்த விக்கெட் – திமுகவின் பந்து வீச்சில் கிளீன் போல்ட்!

சென்னை (24 பிப் 2020): அதிமுகவில் இருந்து விலகிய ராஜ கண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஏற்கனவே அறிவித்தபடி மதுரையில் ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். ராஜ கண்ணப்பட்ன் திமுகவில் இணைந்தது குறித்து செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து செல்லூர் ராஜூ கூறியதாவது, ராஜ கண்ணப்பன் தமிழகத்தில் செல்லாத நோட்டாகிவிட்டார். அவர் முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில்…

மேலும்...

எம்ஜிஆர் சிலையில் காவி நிறம் – சப்பை கட்டு கட்டும் அதிமுக நிர்வாகி!

திருவண்ணாமலை (19 பிப் 2020): திருவண்ணாமலை அருகே எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கபட்டுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கருங்காலிகுப்பம் கிராமத்தில் எம்ஜிஆர் சிலை ஒன்று உள்ளது. பல ஆண்டுகளாக அதில் வெள்ளை சாயம் அடிக்கப்பட்டிருந்த நிலையில், எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு, எம்ஜிஆர் சிலையை அதிமுக நகர செயலாளர் ஓசி முருகன் தலைமையில் தூய்மைப்படுத்தி காவி நிறத்தில் சட்டை அணிவிக்கப்பட்டு பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த இரண்டு மாத காலமாக…

மேலும்...

உண்மை ஒருநாள் வெளியே வரும் – ஊடகங்கள் மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை (07 பிப் 2020): ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் தி.மு.க சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளர் இளைய அருணா இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின் ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பேசியதாவது: “ஒருகாலத்தில் வைதீக திருமணங்களை நடத்தி வைப்பதற்கு புரோகிதர்களை தேடி அலையும் நிலை இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாகி சீர்திருத்தத் திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. இப்போதெல்லாம்…

மேலும்...

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்!

சென்னை (07 பிப் 2020): அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவில் இணைகிறார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டில் ’மக்கள் தமிழ் தேசம்’ எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பின்னர், 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் தனது கட்சியை இணைத்தார். இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும்…

மேலும்...

தோல்வியை கொண்டாடி ஆச்சர்யப்படுத்திய திமுக பிரமுகர்!

பரங்கிப்பேட்டை (04 பிப் 2020): தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தோல்வியை பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் திமுக பிரமுகர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்…

மேலும்...

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை – பட்டப்பகலில் பயங்கரம்!

ஈரோடு (03 பிப் 2020): ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அண்மையில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பிரமுகர், சின்ன தங்கம் என்ற ராதாகிருஷ்ணன், செல்லம்பாளையத்தில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில், தனது இருசக்கர வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக கொடுத்துவிட்டு இன்று காலையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது கறுப்பு நிற ஸ்கார்பியோ காரில் அங்கு வந்த கூலிப்படையினர் 4 பேர், திடீரென…

மேலும்...

பாஜகவில் இணைந்த அதிமுக எம்பி!

சென்னை (02 பிப் 2020): அதிமுக எம்பி சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார். சசிகலா புஷ்பா. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தூத்துக்குடி நகராட்சி மேயராக இருந்த சசிகலா புஷ்பா, 2014ஆம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினரக பொறுப்பேற்றார். இந்த நிலையில், ஜெயலலிதா என்னை அடித்தார் என்று கூறி கடந்த 2016ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பரபரப்பை கிளப்பினார். இதன் தொடர்ச்சியாக, அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். அதேசமயம் வேறு சில கட்சிகளுடன் நெருக்கம் காட்டிய…

மேலும்...

குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் – ஸ்டலின்!

சென்னை (02 பிப் 2020): குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிக்காய் குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றுக்கு எதிரான ஒருகோடி கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் உரையாற்றுகையில், தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

மேலும்...

திருமண விழாவில் பிறந்தநாள் – அசரடித்த அழகிரி!

மதுரை (30 ஜன 2020): முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். திமுக ஆட்சியில் இருந்தபோது அவரது பிறந்த நாளன்று, மதுரையே திருவிழா கோலம் பூண்டிருக்கும். அவரது ஆதரவாளர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழகிரியையும், அவரது குடும்பத்தினரையும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்திற்கு அழைத்து வந்து பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள். மு.க.அழகிரி, கேக் வெட்டி, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார். விழாவில் கலந்து கொண்டோருக்கு…

மேலும்...

13 வருடங்கள் என்ன செய்தீர்கள்? – ஸ்டாலினுக்கு எடப்பாடிகேள்வி!

சென்னை (26 ஜன 2020): 13 வருடங்கள் மத்தியில் இருந்து தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். மொழிப் போர் தியாகிகளுக்கான நினைவுப் பொதுக்கூட்டம் சென்னையில் அதிமுக சார்பாக நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது- அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு பாஜகவின் அடிமை அரசு என்று செல்லும் இடமெல்லாம் ஸ்டாலின் சொல்லி வருகிறார். அப்படியல்ல….

மேலும்...