டெல்லியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு!

புதுடெல்லி (13 ஜன 2020): குடியுரசுதினக் கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஒரு வாரத்துக்கு சுமாா் 1.45 மணி நேரம் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படாது என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜனவரி 18, 20, 21,22,23,24, 26 ஆகிய தேதிகளில் காலை 10. 35 மணி முதல் 12.15 மணி வரை தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து…

மேலும்...

காஷ்மீரில் மூவர் சுட்டுக் கொலை!

புல்வாமா (12 ஜன 2020): காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.. இந்நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் உள்நுழைந்ததாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அவ்விடத்திற்குச் சென்றனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

மேலும்...

மோடி என்னிடம் பேரம் பேசினார் – ஜாகிர் நாயக் பரபரப்பு தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரது நேரடி உத்தரவின் பேரில் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர் தம்மை சந்தித்துப் பேசியதாகத் இஸ்லாமிய மத போதகர் ஜகிர் நாயக் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், தாம் தகுந்த பாதுகாப்புடன் இந்தியா திரும்ப வழிவகை செய்யப்படும் என அந்தப் பிரதிநிதி தம்மிடம் உறுதியளித்ததாகவும் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார். ஜாகிர் நாயக்கின் கூற்று…

மேலும்...

குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (11 ஜன 2020): தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கிய…

மேலும்...

இந்தியா மிகப்பெரிய பொருளாதார அழிவை சந்திக்கும் – அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி (09 ஜன 2020): அமெரிக்க ஈரான் போர் வந்தால் இந்தியா பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா ஈரான் இடையே போர் வருமோ என்ற அச்சம் உள்ள நிலையில், இந்தியாவில் இதன் தாக்கத்தை சாமானிய மக்கள் வரை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பிரச்னையால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு என்பது பல லட்சம் கோடிகளில் தான் கணக்கிட முடியும். இந்தப் பிரச்சனையால் ஈரானின் பொருளாதாரம், 0.3 சதவிதம் வரை பாதிக்கப்படும்…

மேலும்...

ஈரான் அமெரிக்கா போர் பதற்றம் – இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி (08 ஜன 2020): ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியர்களுக்கும், இந்திய விமான நிறுவனங்களுக்கும் இந்திய அரசு அறிவுறுத்தல் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள், ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் வான் வழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஈராக்கில் வசிப்போர் அந்நாட்டுக்குள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஈராக் நாட்டுக்குச் செல்வதை இந்தியர்கள்…

மேலும்...

இன்று பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை – அரசு உத்தரவு!

புதுடெல்லி (08 ஜன 2020): இன்று நாடு தழுவிய பந்த் நடைபெறும் நிலையில் பணிக்கு வராத அரசு ஊழியர்களின் பணம் பிடித்தம் செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேச நலனுக்கு விரோதமாக ரயில்வே, விமானப் போக்குவரத்து, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், வாராகடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது….

மேலும்...