இலங்கை அரசுக்கு எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி கடிதம்!

சென்னை (14 மே 2020): கொரோனாவால் உயிரிழந்த இலங்கை வாழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எஸ்.டி.பி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இலங்கை அரசுக்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு இமெயில் மூலம் விடுத்துள்ள மனுவில் கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக பரவிவரும் கோவிட்-19 பரவல் ஒட்டுமொத்த உலகையே பெரும் ஆட்டம் காண வைத்துள்ளது. சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில்…

மேலும்...

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கோரிக்கை!

கொழும்பு (29 ஏப் 2020): சென்னையில் கடந்த ஒரு மாதமாக சிக்கித் தவித்துவரும் 160 இலங்கையர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டு வர வேண்டும் என வெளி விவகார அமைச்சுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கேவுக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாடு திரும்ப முடியாமல் சென்னையில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்) மன உளைச்சலுக்கும்…

மேலும்...

சமூக வலைதள அவதூறு பதிவுகளுக்கு எதிராக புதிய சட்டம்!

கொழும்பு (24 ஜன 2020): சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இணையத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பதற்காக இலங்கை கணினி Sri Lanka Computer Emergency Readiness Team என்ற பிரிவு Cyber security act என்ற சட்ட வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கூட்டம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்றதுடன் தயாரிக்கப்பட்டுள்ள…

மேலும்...

சர்வதேச பொறியியல் போட்டியில் தங்கம் வென்ற ஃபாத்திமா ஷெரீன்!

கொழும்பு (21 ஜன 2020): இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச பொறியியல் போட்டியில் இலங்கை மாணவி ஃபாத்திமா ஷெரீன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சர்வதேச போட்டி ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பாத்திமா ஷெரீன் என்ற மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் இலங்கை திரும்பியபோது விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

மேலும்...

இலங்கை விமான நிலையத்தில் பரபரப்பு – 9 பேர் கைது!

கொழும்பு (20 ஜன 2020): இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையைத்தில் 9 பேரை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை தேசிய மற்றும் வெளிநாட்டு பிரயாணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும்...

குடிசை வீட்டிலிருந்தபடியே மருத்துவம் பயிலும் ஏழை மாணவி!

குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) தேர்வில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி. இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மருத்துவக் கல்விக்கான ஒதுக்கீடு உண்டு என்பதால், திருகோணமலை மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ள முஸாதிகா இலங்கையில் உள்ள எந்த முன்னணி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும். கடந்த வருடம் உயர்தர பரீட்சையில்…

மேலும்...