உவைஸி தலைமையிலான கூட்டணியின் 100 வேட்பாளர்களும் படுதோல்வி!

லக்னோ (10 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) உ.பி. தேர்தலில் 100 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. ஏஐஎம்ஐஎம் மேலாளரும், ஹைதராபாத் மக்களவை எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசிக்கள்) மற்றும் தலித்துகள் மத்தியில் ஆதரவு தளத்தைக் கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய பாகிதாரி பரிவர்தன் மோர்ச்சா என்ற புதிய முன்னணியைத் தொடங்கினார். பாகிதாரி…

மேலும்...

நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை – காங்கிரசுக்கு கடும் பின்னடைவு!

புதுடெல்லி (10 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 03 இடங்களிலும், காங்கிரஸ் 03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பஞ்சாப்…

மேலும்...

வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருட்டு – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

லக்னோ (09 மார்ச் 2022): உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வாரணாசியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். “2017 இல், கிட்டத்தட்ட 50 இடங்களில் பாஜகவின் வெற்றி வித்தியாசம் 5,000 வாக்குகளுக்கும் குறைவாக இருந்தது என்று சுட்டிக்காட்டினார். டிரக்கில்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுவது கடினம் – அதிர்ச்சியில் பாஜக!

லக்னோ (27 பிப் 2022): உத்தரப்பிரதேச சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என பா.ஜ.க வின் உள்கட்சி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சமாஜ்வாதி – ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணி, லக்கிம்பூர் கெரியில் நடக்கும் வன்முறைகள், தேர்தலில் பாஜகவை பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்….

மேலும்...

இலவச கல்வி – 20லட்சம் பேருக்கு வேலை – உ.பி தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அதிரடி!

லக்னோ (09 பிப் 2022): உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, விவசாய கடன் தள்ளுபடி, எல்கேஜி முதல் கல்லூரி வரை இலவச கல்வி, 20லட்சம் பேருக்கு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். இன்று உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி தலைவர்கள் முன்னிலையில் பிரியங்கா காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு…

மேலும்...

பாஜக புதிய வேட்பாளர் பட்டியலில் பிராமணர்களுக்கு முன்னுரிமை!

லக்னோ (29 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக வெளியிட்டுள்ள புதிய வேட்பாளர் பட்டியலில் பிராமணர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. 91 வேட்பாளர்கள் கொண்ட பாஜக பட்டியலில் 21 பிராமண வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே சமயம் பல்வேறு சமூகங்களும் பாஜகவை கைவிட்டு வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தை அடுத்து பாஜகவுக்கு எதிராக பல சமூகங்கள் ஒன்றிணைவதும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. ஜாட் சமூகம் பாஜகவில் இருந்து விலகி நிற்கிறது. இதனால் 200 ஜாட் தலைவர்களை அழைத்து பாஜக விவாதித்தது….

மேலும்...

கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய அமித் ஷா – வீடியோ!

லக்னோ (28 ஜன 2022): உத்திர பிரதேச மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி, பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா வழிகாட்டல்முறைகள் எதனையும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி அங்குள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். #WATCH | Union Home Minister Amit Shah holds door-to-door campaign in Dadri, Gautam Buddha Nagar in…

மேலும்...

மதுக்கடையில் மது வாங்கிக்குடித்த 6 பேர் பலி!

ரேபரேலி (27 ஜன 2022): உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடையில் மது வாங்கி பருகிய ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள பஹார்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் ஐவர் மற்றும் மூன்று கலால் துறை அதிகாரிகள் என 8 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று இரவு நடைபெற்ற விசேச நிகழ்வில் பங்கேற்ற சிலர் மதுபானம் வாங்கிப் பருகி…

மேலும்...

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கபில் கான் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு!

லக்னோ (27 ஜன 2022): உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து மருத்துவர் கஃபீல் கான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக…

மேலும்...

உத்திரபிரதேச தேர்தலில் சிறை‌யி‌ல் இருந்தபடி போட்டியிடும் ஆசம்கான் நஹித் ஹசன்!

லக்னோ (25 ஜன 2022): உத்திரபிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் முகமது ஆசம் கான் மற்றும் நஹித் ஹசன் ஆகியோர் சிறையில் இருந்தபடி போட்டியிடுகின்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான முகமது ஆசம் கான் அக்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆசம் கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிப்ரவரி 2020 முதல் சிறையில் உள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில், அவரது மனைவி தன்சீன் பாத்திமா மற்றும்…

மேலும்...