வழிபாட்டுத் தலங்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்பட மாட்டாது – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (31 மே 2020): கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீடிநகாணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…

மேலும்...

இந்தியாவில் ஜூன் 8 முதல் 30 ஆம் தேதி வரை தளர்த்தப்படும் தளர்வுகள்!

புதுடெல்லி (30 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜூன் 8 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் முதல்கட்ட தளர்வுகள்: *ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி. இரண்டாம் கட்ட தளர்வுகள்: இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். மூன்றாம் கட்ட தளர்வுகள்:…

மேலும்...

நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு!

புதுடெல்லி (30 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் இருக்கிறது. இதுவரை நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு…

மேலும்...

கேரளாவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு தளர்வு!

திருவனந்தபுரம் (23 மே 2020): ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க கேரளாவில் மற்ற நாட்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்க ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ரம்ஜான் பண்டிகை அறிவிக்கப் பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வகையில் சனிக்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. அதேபோல ரம்ஜான் பண்டிகை தினமான ஞாயிற்றுக் கிழமை மட்டும்…

மேலும்...

தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு!

சென்னை(17 மே 2020): தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து…

மேலும்...

ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி அதிரடி!

புதுடெல்லி (12 மே 2020): கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள முழு பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேவேளை ஊரடங்கு 4.0 முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதற்கான புதிய விதிமுறைகள் மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்தி மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு (மே 12) 8 மணியளவில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், “20 லட்சம் கோடி:…

மேலும்...

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு – எந்தெந்த கடைகள் செயல்படலாம்? – முழு விளக்கம்!

சென்னை (10 மே 2020): கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை முதல் 34 வகையான கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு திறக்க அனுமதித்த கடைகளின் விவரம் வருமாறு: டீக்கடைகள் (பார்சல் மட்டும்) பேக்கரிகள் (பார்சல் மட்டும்) உணவகங்கள் (பார்சல் மட்டும்) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்குக் கடைகள் கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள் சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள் மின்…

மேலும்...

இந்தியாவில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

புதுடெல்லி (01 மே 2020): இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்து வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்...

ஊரடங்கில் மது போதையில் அதிமுக பிரமுகர் – வெளுத்து வாங்கிய பெண் போலீஸ் (வீடியோ)

கள்ளக்குறிச்சி (23 ஏப் 2020): ஊரடங்கில் மதுக்கடைகள் மூடியிருக்க, மது போதையில் பெண் போலீசிடம் தன் திமிரைக் காட்டிய அதிமுக பிரமுகர் மீது எதற்கும் அச்சப்படாமல் ஆக்‌ஷன் எடுத்திருக்கிறார் அந்த பெண் போலீஸ். கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்த நிலையில் நாடெங்கிலும் மது கடைகள் மூடப்பட்டிருக்க, மது அருந்திவிட்டு…

மேலும்...

விவசாயம் – மீன்பிடி தொழில்களுக்கு இன்று முதல் அனுமதி!

புதுடெல்லி (20 ஏப் 2020): உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இன்றுமுதல் விவசாயம் மீன்பிடி தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பல்வேறு மாநிலங்களில் 26 நாட்களுக்‍கு பிறகு இன்று தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்‍கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு…

மேலும்...