எடப்பாடி பழனிச்சாமி மீது ஓ.பி.எஸ் பாய்ச்சல்!

சென்னை (28 பிப் 2022): என்னை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளின் போது, சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 24-ந் தேதி சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பிற்கு ஓ.பி.எஸ்சை அழைத்துச் செல்லவில்லை. ஓ.பி.எஸ்சிடம் சொல்ல கூட இல்லை எடப்பாடி. இத்தனைக்கும், ஓ.பி.எஸ். கேட்டும் ஜெயக்குமாரைச் சந்திக்க செல்வது பற்றி மூச்சு விடவில்லை இ.பி.எஸ். இந்த நிலையில், ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும்…

மேலும்...

ராஜேந்திர பாலாஜி வழக்கு குறித்து ஓபிஎஸ் மழுப்பல் பதில்!

சென்னை (18 டிச 2021): முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார் “ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டு, நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது. நீதிமன்ற கட்டுப்பாட்டில் அது இருப்பதால், அதுகுறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை.” என்றார். மேலும் “பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், இப்படியான விபத்துகளை தவிர்ப்பது குறித்தும் அரசுக்கும் முதல்வருக்கும் நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அரசு அதை கணக்கில் கொண்டு, விரைந்து நடவடிக்கை…

மேலும்...

சசிகலா எச்சரிக்கை!

சென்னை (05 டிச 2021): அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும் ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்தது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைபடும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும்…

மேலும்...

சட்டசபையில் தன்னைதானே நொந்துகொண்ட ஓ.பி.எஸ்!

சென்னை (28 ஆக 2021): சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னை தானே நொந்து கொண்டார். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு. இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு மத்திய அரசிடம் தமிழக அரசு விவாதித்ததா? என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது எழுந்த…

மேலும்...

மத்திய அரசு, ஒன்றிய அரசு – ஓபிஎஸ் என்ன சொல்றார் தெரியுமா?

சென்னை (04 ஜூலை 2021): மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”தேசியத்திற்கு எதிரான செயல்கள் நடப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் ஆகும். யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல். கூட்டாட்சி தத்துவம் குறித்து தலைவர்கள் கூறியதை வைத்து ஒன்றிய…

மேலும்...

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – பீதியை கிளப்பும் நத்தம் விஸ்வநாதன்!

சென்னை (19 ஜூன் 2021): ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா, அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த…

மேலும்...

கூட்டணியில் சலசலப்பு – ஓபிஎஸ், இபிஎஸ் திடீர் முடிவு!

சென்னை (14 ஜூன் 2021): சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவுடன் பா.ம.க. மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது என பாமகவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி,யுமான அன்புமணி விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து அதிமுகவின்…

மேலும்...

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுகிறதா? – சுகாதரத்துறை அமைச்சர் பதில்!

சென்னை (11 ஜுன் 2021):  சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுகிறதா? என்ற ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக  சுகாதரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன்,விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாகவே ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படும் என்ற செய்திகள் திடீரென கிளம்பின.. எனவே, நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஓபிஎஸ் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்..அதில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றும் முடிவை முதலமைச்சர்கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்…

மேலும்...

ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி!

சென்னை (30 மார்ச் 2021): வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தற்காலிகமானது என ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டி பாமகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்…

மேலும்...

சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக – பச்சை கொடி காட்டும் ஓபிஎஸ்!

சென்னை (24 மார்ச் 2021): தேர்தலுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அதிமுக இயங்க வாய்ப்பு உள்ளதாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் கட்சியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., “என்னை பொருத்தவரையில், மனிதாபிமானம் அடிப்படையில் பார்த்தால் அவர் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ,…

மேலும்...