சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – சாமியார் சிறையிலடைப்பு!

பெங்களூரு (02 செப் 2022): சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைதான லிங்காயத் சாமியார் பரசுராமன் சிவமூர்த்தியை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் சித்ரதுர்காவில் ஜகத்குரு முருகராஜேந்திர வித்யாபீட மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு. இவர் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 1) இரவு மடத்தில் வைத்து சிவமூர்த்தியை…

மேலும்...

முஹம்மது பாசில் கொலை வழக்கில் 4 பேர் கைது!

பெங்களூரு (02 ஆக 2022): கர்நாடகாவில் முகமது பாசில் கொலை வழக்கை விசாரித்த கர்நாடக போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உத்தர கன்னடா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல் நகரில் ஜூலை 28ஆம் தேதி ஃபாசில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பாஜக யுவ மோர்ச்சா…

மேலும்...

முஸ்லீம் இளைஞர் வெட்டிக்கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

மங்களுரு (29 ஜூலை 2022): கர்நாடக மாநிலம் மங்களுரு அருகே வியாழன் மாலை முஸ்லிம் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் உயிரிழந்த முஸ்லிம் இளைஞர், மங்களூருவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சூரத்கல் அருகே உள்ள மங்கல்பேட்டையில் வசிக்கும் முகமது ஃபாசில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மங்களூர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பிரவீன் குமார் நெட்டாருவின் குடும்பத்தை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த சம்பவம்…

மேலும்...

முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது – இந்துத்துவாவினர் வலியுறுத்தல்!

பெங்களூரு (26 ஏப் 2022): முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் உத்தரவிட்டுள்ளனர். பாஜக ஆளும் கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி, முஸ்லிம் வியாபாரிகள் மீதான உளவியல் தாக்குதல் என தொடரும் பிரச்சனை தற்போது அட்சய திருதியையின் போது கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் நடத்தும் கடைகளில் தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்துக்களை வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து ஸ்ரீ ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில்,…

மேலும்...

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடை – பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்!

உடுப்பி (22 ஏப் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடுப்பி மாவட்டத்தி ஹிஜாப் அணிந்து 12 ஆம் வகுப்பு தேர்வெழுத சென்ற மாணவிகள் இருவர் தேர்வு எழுத அனுமதி மறுப்பட்டுள்ளனர். அனுமதி மறுக்கப்பட்ட இருவரும் ஹிஜாபுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மனு அளித்தவர்கள் ஆவர். கர்நாடகா உடுப்பியில், இரண்டாம் பியூசி (12ஆம் வகுப்பு) தேர்வு எழுத வித்யோதயா பியூ கல்லூரி தேர்வு மையத்திற்கு வந்த அலியா அசாதி மற்றும் ரேஷ்மா…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான சமூகவலைத்தள பதிவு – கர்நாடகாவில் வெடித்த வன்முறை!

ஹூப்பள்ளி (17 ஏப் 2022): கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவிட்ட நிலையில் இதற்கு எதிராக காவல்துறை சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி காவல்நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தினரை இழிவுபடுத்தி பதிவிட்டதை அடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைதான அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் பழைய ஹூப்ளி காவல்…

மேலும்...

எனது வாழ்வாதாரத்தை என் கண் முன்னே அழித்தனர் – முஸ்லிம் வியாபாரி கதறல்!

பெங்களூரு (11 ஏப் 2022): எனது வாழ்வாதாரத்தை என் கண் முன்னே காவி துணி ஏந்திய குழுக்கள் அழித்தனர் என்று முஸ்லிம் பழ வியாபாரி தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள நுக்கிகேரி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு பழ வண்டிகளை இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை சேதப்படுத்தினர். இரு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீராம்சேனை அமைப்பினர், இஸ்லாமிய வணிகர்களை வளாகத்திலிருந்து வெளியேற்ற கோவிலை நிர்வகிக்கும் அமைப்பிற்கு காலக்கெடுவை வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும்…

மேலும்...

ஒலிபெருக்கிகள் தடை உத்தரவை கோவில்களும் பின்பற்ற வேண்டும் – பெங்களூரு தலைமை இமாம்!

பெங்களூரு (08 ஏப் 2022): கர்நாடகாவில் இந்துத்துவா குழுக்களின் ஒலிபெருக்கி சர்ச்சையில் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு ஜாமியா மசூதியின் தலைமை இமாம் முகமது இம்ரான் ரஷாதி வியாழக்கிழமை, ஒலி அளவை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில்களும் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். . இதுகுறித்து ரஷாதி கூறுகையில், “பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஒலியைக் கட்டுப்படுத்தும் சாதனத்தை மசூதிகளில் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். உச்சநீதிமன்றம் பிறப்பித்த…

மேலும்...

முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு!

பெங்களூரு (06 ஏப் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு விடுத்துள்ளனர். கர்நாடகாவில் இந்துத்துவாவினரின் அடாவடி எல்லை மீறி சென்றுகொண்டுள்ளது. ஹிஜாப்களுக்கு எதிரான பிரச்சாரங்கள், கோவில் கண்காட்சிகளில் முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிப்பு, ஹலால் இறைச்சி, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துதலுக்கு எதிர்ப்பு என கூக்குரல் இட்டு வரும் இந்துத்துவாவினர், இப்போது முஸ்லிம் பழ வியாபாரிகளைக் குறிவைத்து, மொத்த பழச் சந்தையில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. கர்நாடகாவில்…

மேலும்...

வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலிவாங்கிகளை காவல்துறையினர் பறிமுதல்!

பெங்களூரு (06 ஏப் 2022): கர்நாடகாவில் விதிமுறைகளை மீறி ஒலிபெருக்கியை பயன்படுத்தும் வழிபாட்டுத்தலங்களில் காவல்துறையினர் ஒலிவாங்கிகளை பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளனர். பல இந்துத்வா அமைப்புகள் மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஒலி மாசுபாடு குறித்த நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை பெங்களூரு நகர காவல்துறையினர் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். செவ்வாயன்று, நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறிய வழிபாட்டுத்தலங்களில் இருந்து பல ஒலிவாங்கிகள்…

மேலும்...