பாங்கு நேரத்தில் கோவில்களில் இந்து பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டம்!

பெங்களூரு (04 ஏப் 2022): கர்நாடகாவில் தொழுகைக்கு அழைக்கும் (பாங்கு) நேரத்தில் இந்து பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி விவகாரம் என கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ள சூழலில் மசூதிகளில் பாங்கு அழைக்கும் நேரங்களில் “ஓம் நம சிவா”, “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்கள் மற்றும் பிற பக்தி பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. பெங்களூரில் உள்ள ஆஞ்சநேயா கோவிலில் பாங்கு…

மேலும்...

கர்நாடகாவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்க இந்து அமைப்புகள் கோரிக்கை!

பெங்களூரு (04 ஏப் 2022): மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் இந்து அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, ஒலிபெருக்கி பயன்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனையின் மாநிலத் தலைவர் சித்தலிங்க சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மசூதிகளில் ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்…

மேலும்...

ஹலால் இறைச்சி விற்பனையாளர் மீது பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்குதல்!

பெங்களூரு (01 ஏப் 2022): கர்நாடகாவில் ஹலால் இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துத்துவா குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினர் வியாழக்கிழமை பத்ராவதியில் ஒரு முஸ்லிம் விற்பனையாளரைத் தாக்கியுள்ளது. இதுகுறித்து ANI இடம் பேசிய ஷிவமொக்கா காவல் கண்காணிப்பாளர் (SP) BM லக்ஷ்மி பிரசாத், தொடர்புடைய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். “பஜ்ரங் தள் ஆர்வலர்கள் வாக்குவாதம் செய்து ஒரு முஸ்லீம் வியாபாரியைத் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து பத்ராவதியில்…

மேலும்...

பெண்கள் விருப்பப்படி வாழ விடுங்கள் – ஹிஜாப் விவகாரத்தில் உலக அழகி பரபரப்பு கருத்து!

சண்டிகர் 931 மார்ச் 2022): ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் கவுர் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். சண்டிகரில் ​​ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹர்னாஸ், ஹிஜாப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். ஹிஜாப் பிரச்சினையை அரசியலாக்குபவர்களுக்கு எதிரிப்பு தெரிவித்த ஹர்னாஸ், ஒரு பெண் ஹிஜாப் அணிவது அவரின் விருப்பம், என்றார். மேலும் “பெண்கள் இஷ்டப்படி வாழட்டும். நம் பெண்கள் அனைவரும் வெவ்வேறு நிறங்கள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து வந்தவர்கள். நாம் ஒருவருக்கொருவர் ஒருவரை…

மேலும்...

ஹிஜாப் தடையால் தேர்வை புறக்கணித்த கல்லூரி மாணவிகள்!

உடுப்பி (31 மார்ச் 2022): ஹிஜாப் தடை காரணமாக கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்நிலைப் பல்கலைக் கழகத் தேர்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மார்ச் 15 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றம், பள்ளி கல்லுரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. மேலும் ஹிஜாப் இஸ்லாத்தில் இன்றியமையாத மத நடைமுறை அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது. கல்வி நிறுவனங்களில் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது….

மேலும்...

ஹலால் அல்லாத கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்!

பெங்களூரு (31 மார்ச் 2022): ஹலால் அல்லாத கோழிக்கறி கேட்டு முஸ்லிம் வியாபாரி மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஹிஜாப் விவகாரத்திற்குப் பிறகு கர்நாடகாவில் இந்துத்துவாவினர் பல்வேறு விதமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவிலுக்கு அருகில் முஸ்லீம் வியாபாரிகளுக்கு தடை விதித்தனர். தற்போது ஹலால் இறைச்சி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஹலால் கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகளை அடித்து உதைத்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஷிவமொகா பகுதியில் பஜ்ரங் தள் குழுவினர்…

மேலும்...

முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்க வேண்டாம் – இந்துக்களுக்கு பஜ்ரங்தள் அழைப்பு!

பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என பஜ்ரங்தளம் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூருவில் நடந்த நீலமங்கல உகாதி கண்காட்சியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் இந்து விற்பனையாளர்களைச் சந்தித்து முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் கன்னடத்தில் அச்சிடப்பட்ட அறிவிப்பை பலருக்கும் பஜ்ரங்தள அமைப்பினர் விநியோகித்து வந்தனர். ஹிஜாப் தடையால் கர்நாடகாவில் இஸ்லாமிய வெறுப்பு தலைவிரித்தாடுகிறது. அங்கு முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களில் வியாபாரம் செய்ய முடியாத…

மேலும்...

ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

[1:47 PM, 3/30/2022] Sulthan Kuwait: பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வெழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் ஹிஜாப் இஸ்லாமிய நடைமுறைகளில் அவசியமானதல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடைபெற்று வருகிறது. ஹிஜாப்…

மேலும்...

ஹிஜாப் தடை காரணமாக தேர்வை புறக்கணித்த 20 ஆயிரம் மாணவிகள்!

பெங்களூரு (29 மார்ச் 2022): கர்நாடகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சிதேர்வு எழுதாத விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 732 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர் மாணவிகள். 4 பேர் 3-ம் பாலினத்தவர்கள். 3 ஆயிரத்து 444 தேர்வு மையங்களில் இந்த…

மேலும்...

ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுடெல்லி (28 மார்ச் 022): பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஆதரித்து உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் இரண்டு முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமிய நூல்கள் குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தின்…

மேலும்...