காங்கிரஸ் இந்துக்கள் கட்சி – ராகுல் காந்தி உரை!

ஜெய்ப்பூர் (13 டிச 2021): காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, இந்து மற்றும் இந்துத்துவா என்பதற்கு வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார். இரண்டும் வெவ்வேறானவை எனக்கூறிய அவர், ‘ நான் ஒரு இந்து, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்துத்துவவாதிகள்’ என கடுமையாக விமர்சித்தார். உண்மையை நேசிப்பவர்கள் இந்துக்கள் எனக் கூறிய ராகுல்காந்தி, மகாத்மா காந்தி உண்மையைத் தேடியவர் எனத் தெரிவித்தார். ஆனால், நாதுராம் கோட்சே இந்துத்துவவாதி,…

மேலும்...

முதலில் பாஜக பின்பு காங்கிரஸ் இப்போ எந்த கட்சி தெரியுமா? – கட்சிகளை சுற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

புதுடெல்லி (23 நவ 2021): முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் மம்தா கட்சியில் இணைகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கீர்த்தி ஆசாத் அரசியலுக்குள் நுழைந்து பா.ஜனதாவில் சேர்ந்தார். 1999, 2009, 2014 ஆகிய 3 முறை அவர் எம்.பி.யாக இருந்தார். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கீர்த்தி ஆசாத்…

மேலும்...

காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்!

புதுடெல்லி (16 ஆக 2021): காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவி சுஷ்மிதா தேவ், அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் சுஷ்மிதா தேவ் மிக முக்கியமான தலைவர் ஆவார். முன்னதாக அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியிருந்தார். ஆனால், அந்த கடிதத்தில் பதவி விலக்கலுக்கான எந்தக் காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்தாகக்…

மேலும்...

மோடி இந்த முறையாவது தொகையை மாற்றி கூறியிருக்கலாம் – எதிர் கட்சிகள் விமர்சனம்!

புதுடெல்லி (16 ஆக 2021): பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளாக ஒரே உரையை நிகழ்த்தி வருவதாகவும், திட்டங்களை அறிவிப்பதைத் தவிர அதை செயல்படுத்தவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கட்கே தெரிவிக்கையில், “மோடி திட்டங்களை அறிவிக்கிறாரே தவிர பாதிக்கப்பட்ட விவசாயிகள் உட்பட யாருக்கும் எதுவும் செய்யவிலை.மோடி நிறைய விஷயங்களைச் சொல்கிறார். ஆனால் எதுவும் உறுதியாக நிற்கவில்லை” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவிக்கையில், ” பிரதமரால் அறிவிக்கப்பட்ட…

மேலும்...

காங்கிரசில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

புதுடெல்லி (29 ஜூலை 2021): தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிராசில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை 22 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த சந்திப்பு நடைபெற்றது, மூத்த தலைவர்களான கமல்நாத், மல்லிகார்ஜூன் கார்கே, ஏ.கே. ஆண்டனி, அஜய் மேக்கன், ஆனந்த் சர்மா, ஹரிஷ் ராவத், அம்பிகா சோனி…

மேலும்...

பயமிருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் – காங்கிரஸ் தொண்டர்களிடம் ராகுல் காந்தி ஆவேசம்!

புதுடெல்லி (17 ஜூலை 2021): காங்கிரஸ் கட்சியில் இருக்க பயமாக இருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம், குஜராத் போன்ற பெரிய மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கட்சி தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார் ராகுல் காந்தி. அப்போது வழக்கத்தை விட ஆவேசம் அதிகமாகத் தென்பட்டது. மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜோதிராதித்ய…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம் – ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம் என்று ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “காங்கிரஸ் ஆட்சியின்போது, ​​எண்ணெய் பத்திரங்களில் இருந்த பல கோடி ரூபாய்கள் திருப்பிச் செலுத்தப் படவில்லை. இப்போது நாங்கள் அந்தத் தொகையினை, முதல் மற்றும் வட்டியுடன் சேர்த்து செலுத்துகிறோம். ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதுதான் பெட்ரோல் விலை பெருமளவில் அதிகரிக்க வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் சர்வதேசச் சந்தையில் கச்சா…

மேலும்...

காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – மேலும் ஒரு வேட்பாளர் பலி!

கொல்கத்தா (15 ஏப் 2021): மேற்கு வங்க காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வருகிற 17ந்தேதி 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 39 பேர் பெண்கள் ஆவர். தேர்தல் ஜல்பைகுரி, கலிம்போங், டார்ஜிலிங், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா வர்தமான்…

மேலும்...

ஸ்டாலின் ராகுல் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் கொரோனாவால் மரணம்!

சேலம் (02 ஏப் 2021): சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் கொரானா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 4 நாட்களாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முன்னதாக சேலத்தில் கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் ஜெயபிரகாஷும்…

மேலும்...

நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கிக் கொண்ட பாஜக வேட்பாளரும் காங்கிரஸ் வேட்பாளரும்!

நாகர்கோவில் (18 மார்ச் 2021): கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய் வசந்த் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் சந்தித்து, கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர், கன்னியாகுமரி இடைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச். வசந்தகுமாரின் மகனும், திரைப்பட நடிகருமான விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்பு…

மேலும்...