தொகுதி கிடைக்காததால் மொட்டை அடித்துக்கொண்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி!

திருவனந்தபுரம் (15 மார்ச் 2021): கேரளாவில் அடுத்த மாதம் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி பாஜக ஆகியவை போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தநிலையில் முதற்கட்டமாக 86 வேட்பாளா்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று (14 மார்ச்) காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில் கோட்டயத்தைச் சோ்ந்த மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி லதிகா சுபாஷின் பெயா் வேட்பாளா் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த…

மேலும்...

காங்கிரசின் செயல்பாடுகளால் அதிர்ச்சியில் உள்ள ஸ்டாலின்!

சென்னை (15 மார்ச் 2021): தலைவிரித்தாடும் காங்கிரஸ் கட்சி பூசலால் திமுக கடுமையான அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் பெரிய கட்சியாக கணிக்கப்படும் காங்கிரஸ் தற்போது வலுவிழந்து இருப்பதால் சீட் கொடுப்பதில் ஸ்டாலின் ஆரம்பம் முதலே கறாராக இருந்தார். எனினும் அதிக சீட்டுக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியது. ஒருவழியாக 25 சீட்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் உட்பூசலால்…

மேலும்...

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது மகிளா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பரபரப்பு புகார்

சென்னை (12 மார்ச் 2021): தமிழக காங்கிரஸ் கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஒருவருக்கு கூட டெபாசிட் கிடைக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மகிளா தலைவர் ஜான்சிராணி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “நிலக்கோட்டை தொகுதி மக்களால் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களுக்கு அயராது தொண்டாற்றி, காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மிளிர்ந்த எனது பாட்டி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களை சிறு வயது முதல் பார்த்து…

மேலும்...

170 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் – அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்!

புதுடெல்லி (12 மார்ச் 2021): பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் கட்சி தாவி கொண்டிருப்பது அக்கட்சிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அல்லது சிட்டிங் எம்.எல்.க்களின் கட்சி தாவல் அக்கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) கட்சியை விட்டு வெளியேறியவர்களின் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஆர் வெளியிட்ட தரவுகளின்படி, 2016 முதல் 2020 வரை 170 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

மேலும்...

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் எச்.விஜய் வசந்த் போட்டி?

சென்னை (05 மார்ச் 2021): கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட எச்.விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச்.வசந்த்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்த்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி…

மேலும்...

மக்கள் நீதி மய்யத்துடன் இணையும் காங்கிரஸ்?

சென்னை (04 பிப் 2021): திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரசுக்கு 20 இடங்கள் வழங்கப்படலாம் என்ற நிலையில் காங்கிரஸ் அதற்கு சம்மதிக்கவில்லை. விசிக 6 இடங்களை பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்…

மேலும்...

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

சென்னை (03 மார்ச் 2021): தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளார். மேலும் க்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது. மேலும் “கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட…

மேலும்...
Sonia Rahul

இந்திரா காந்தியின் முடிவு தவறானது – ராகுல் காந்தி பகீர் கருத்து!

புதுடெல்லி (03 மார்ச் 2021): “2014 ல் இருந்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் போராடுவது அதிகாரத்திற்காக அல்ல நாட்டை பாதுகாப்பதற்காக” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ,”இப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. 2014 க்குப் பிறகு, காங்கிரஸ் மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்கின்றன அவை அதிகாரத்திற்காக அல்ல, நாட்டிற்காகவும் நாடு மக்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் போராடுகின்றன.” என்றார் 1975 ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரகால நிலையை…

மேலும்...

மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பூ!

சென்னை (28 பிப் 2021): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நடிகை குஷ்பூ மன்னிப்பு கோரியுள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பூ  முன்பு காங்கிரசில்  இருந்தபோது, சமூக ஊடகத்தில், பா.ஜ., தலைவர்களை அவர் விமர்சனம் செய்திருக்கிறார். தற்போது பாஜகவில் இணைந்ததும்  பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் அவர் சமீபத்தில் சந்தித்த தலைவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். சென்னை வந்த நிர்மலாவை போய் பார்த்தார். அப்போது டிவிட்டரில் நிர்மலா சீதாராமனை விமர்சித்ததற்காக மன்னிப்பு…

மேலும்...

துரோகிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் – முதல்வர் காட்டம்!

புதுச்சேரி (22 பிப் 2021): ஆட்சி கவிழ காரணமான துரோகிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் “பெரும்பான்மையை இழந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம். முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் தான். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு செய்த எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.” என்றார்.

மேலும்...