சென்னையில் போராட்டம் நடத்த தடை!

சென்னை (28 ஜன 2020): சென்னையில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை நகரில் இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிட்டவர்கள் யார் யார்? – நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (22 ஜன 2020): “சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவு செய்த 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்!” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கருத்துகளை ஒருவர் பதிவிட்டிருந்தார். இவ் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் நடந்தது என்ன? – மழுப்பும் காவல்துறை!

மீரட் (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்து போலீசார் சரியான தகவல் சொல்லவில்லை என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மீரட் நகரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, இதுவரை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலேயே பலர் கொல்லப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டத்தை கலைப்பதற்காக காவலர்கள்…

மேலும்...

சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி குடும்பத்துக்கு ரூ 1 கோடி – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (10 ஜன 2020): கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் குடும்பத்துக்கு ரூ1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்களால் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது….

மேலும்...