பில்கிஸ் பானு பாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்யும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (22 அக் 2022): 2002 கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய பெண்கள் அமைப்பின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய மனுவுடன் இந்த மனுவையும் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. முன்னதாக, 11 குற்றவாளிகளுக்கு விடுதலை…

மேலும்...

பில்கிஸ் பானு விவகாரத்தைப் பற்றி பேச மறுத்த ஆம் ஆத்மி தலைவர்!

அகமதாபாத் (20 அக் 2022): பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு தொடர்பான கேள்விகளை டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான மணீஷ் சிசோடியா தட்டிக் கழித்தார். குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தின் போது சிறுபான்மையினர் பிரச்சனைகள் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க சிசோடியா மறுத்துவிட்டார். சமீப நாட்களில், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சார நிகழ்ச்சிகளில் சிசோடியா பங்கேற்றார். அப்போது, தேசிய ஊடகமான ஏபிபியின் நிருபர், பில்கிஸ் பானு விவகாரம்…

மேலும்...

குஜராத்தில் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

தஹோட் (31 ஆக 2022): சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு குஜராத் போஸ்க்கோ தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த செப்டம்பர் 16, 2018 அன்று, குஜராத் தஹோட் மாவட்டத்தில் ஹரேஷ் பரைய்யா என்பவர் தனது இரண்டரை வயது மருமகளை அவரது நெல் பண்ணைக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார். மேலும் சிறுமியின் உடலை பண்ணையின் புதருக்குள் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். மறுநாள் காலை,காவல்துறையினரால் பண்ணையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறுமியின்…

மேலும்...

விநாயகர் ஊர்வலத்தின்போது இரு பிரிவினர் இடையே மோதல்!

வதோதரா (30 ஆக 2022): குஜராத்தில் வதோதரா பகுதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வதோதராவில் “திங்கள்கிழமை இரவு விநாயகர் ஊர்வலம் பானிகேட் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, கல்வீச்சு ஏற்பட்டதாகவும், அப்போது கல் ஒன்று மத ஸ்தலத்தின் ஜன்னலில் பட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளது. மேலும் சிறுபான்மையினர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர்.இதனை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. கலவரப் பிரிவின் கீழ் இரு குழுக்களுக்கு எதிராக…

மேலும்...

பில்கீஸ் பானு கற்பழிப்பு கொலை குற்றவாளிகள் பிராமணர்கள் – பாஜக எம் எல் ஏ!

புதுடெல்லி (18 ஆக 2022):பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களை விடுவிக்க காரணமாக இருந்த குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்களில் ஒருவரான சிகே ரவுல்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவிக்கையில் . “அவர்கள் (11 குற்றவாளிகள்) குற்றவாளிகளா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் பிராமணர்கள் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது. மேலும், அவர்கள் நன்கு பண்பட்ட மனிதர்கள்.”என்றார் கடந்த…

மேலும்...

கேவலப்பட்ட குஜராத் மாடல் – விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவு!

அகமதாபாத் (03 ஜூலை 2022): குஐராத்தில் தேர்தல் முறைகேடு மூலம் அமெரிக்கா சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்களால் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் நின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ் தேர்வில், முறைகேடாக மதிப்பெண் பெற்றிருந்தது…

மேலும்...

அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை!

அஹமதாபாத் (18 பிப் 2022): அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 56 பேர் பலியானார்கள், 200 பேர் காயமடைந்தனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதில், 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுளள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக இந்த…

மேலும்...

ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு தடை!

அஹமதாபாத் (13 பிப் 2022): குஜராத்தில் ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் மேலும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்துள்ளனர். . கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக சூரத்தில் முஸ்லிம் அமைப்புகள் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன. AIMIM இன் சூரத் பிரிவு தலைவர் வாசிம் குரேஷி மற்றும் கட்சி உறுப்பினர் நஸ்மா கான் உட்பட 20 பெண் எதிர்ப்பாளர்கள் பேரணியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவர்களுக்கு தடை…

மேலும்...

பஷீர் அஹமது பாபா – 12 வருட சிறைவாசத்திற்குப் பிறகு குற்றமற்றவர் என விடுதலை!

சூரத் (30 ஜூன் 2021): தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான பஷீர் அஹமது பாபா, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றமற்றவர் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளார். காஷ்மீர் நாட்டைச் சேர்ந்த பஷீர் அகமது பாபா, குஜராத்தில் தீவிரவாத குழுவிற்கு இளைஞர்களை சேர்க்கிறார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது. ஸ்ரீநகரைப் பூர்வீகமாகக் கொண்ட பஷீர் அகமது பாபா, கடந்த 2010…

மேலும்...

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளாக மாறிய மசூதிகள்!

வதோதரா (21 ஏப் 2021); இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மசூதிகள் மருத்துவமனைகளாக மாறியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால் குஜராத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநில மசூதிகள் மருத்துவமமனைகளாக செயல்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள மசூதியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை…

மேலும்...