தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு!

சென்னை (10 ஜன 2020): குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கையுடன் தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இதனை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை தவறாக வழிநடத்தும் பள்ளி!

அஹமதாபாத் (09 ஜன 2020): குஜராத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அஹமதாபாத் லிட்டில் ஸ்டார் பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு மாணவர்கள் போஸ்ட் கார்டில் பிரதமருக்கு குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடிதம் எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் போஸ்ட் கார்டை கொடுத்து அவர்கள் போர்டில் எழுதும் வாக்கியத்தை மாணவர்கள் அனைவரும் எழுத வேண்டும் என்றும் இது பயிற்சிதான் என்பதாகவும் பொய்யான வகையில் மாணவர்களை…

மேலும்...

எச்.ராஜா பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடுங்கோபத்தில் அமித் ஷா!

புதுடெல்லி (09 ஜன 2020): காமெடி பீசாக இருந்து கொண்டு கட்சி பெயரை கெடுக்கிறார்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச் ராஜா மீது அமித் ஷா கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி எச் ராஜா தலைமையில் சமீபத்தில் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியது பாஜக. இந்த போராட்டத்தில் சொற்ப ஆட்களே கலந்து கொண்டனர். இது பாஜக தலைமையை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா,…

மேலும்...

முஸ்லிமாக மாறத் தயார் – நடிகர் ராதாரவி!

சென்னை (08 ஜன 2020): குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தால் நான் முஸ்லிமாகவே மாற தயாராக உள்ளேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். அவ்வப்போது சுயநலத்திற்காக கட்சி தாவும் ராதாரவி, திராவிட பாரம்பர்ய கொள்கையை அடகு வைத்து பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் பேசிய ராதாரவி , “நான் இவ்வளவு நாட்களாக ஏமாற்று கூட்டத்தில் இருந்தேன், இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுள்ளேன். குடியுரிமை சட்டத்தை…

மேலும்...

போராட்டம் எதிரொலி – மோடி அமித் ஷா அசாம் செல்வதை நிராகரித்தனர்!

புதுடெல்லி (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ‘கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விழாவில் பங்கேற்பதை மோடி…

மேலும்...

சிறையில் ஆண் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டேன் – பெண் சமூக ஆர்வலர் சதாஃப் ஜாஃபர்!

லக்னோ (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைதாகி ஜாமீனில் வெளியாகியுள்ளார் சமூக ஆர்வலரும் காங்கிரஸ் பிரமுகருமான சதாஃப் ஜாஃபர். அவருக்கு சிறையில் நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். குறிப்பாக, ” நான் பாகிஸ்தானி என்று அழைக்கப் பட்டு ஆண் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். சூ கால்கலால் உதைக்கப் பட்டேன். என்னைப் போன்று பல அப்பாவிகளுக்கு இந்த கொடுமைதான் நடக்கிறது. இத்தனைக்கும் அது மகளிர் காவல் நிலையம். அங்கு ஆண் காவலர்களின் ஆதிக்கம்…

மேலும்...

நெல்லை கண்ணன் கைது குறித்து முதல்வர் விளக்கம்!

சென்னை (07 ஜன 2020): நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ….

மேலும்...

சட்டசபைக்கு வித்தியாசமாக வந்த தமிமுன் அன்சாரி!

சென்னை (06 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் விதமாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கருப்பு சட்டை அணிந்து வந்தார்.

மேலும்...

பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்- சிவசேனா தலைவர் சரமாரி தாக்கு!

மும்பை (05 ஜன 2020): “பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்!” என்று சிவசேனா தலைவரும் சாம்னா பத்திரிகையின் தலைமை செய்தியாளருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சஞ்சய் ராவத், “பாஜகவுக்கு மகாராஷ்டிராவில் கொடுத்த பாடம் போதாது என நினைக்கிறேன். இனி தொடர்ந்து அவர்கள் பாடம் புகட்ட வேண்டும். மகாராஷ்டிராவில் பாஜக சந்தித்த அவமானம் நாடெங்கும் சந்திக்க வேண்டும்.” என்றார். மேலும்…

மேலும்...

குடியுரிமை சட்ட ஆவணங்களை மறுக்கலாம் – உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்!

ஐதராபாத் (04 ஜன 2020): “குடியுரிமை சட்டம் தொடர்பான ஆவணங்கள் கேட்கும் பட்சத்தில் அதனை சமர்ப்பிக்க வேண்டியதில்லை!” என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மஹ்மூது பிராச்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மஹ்மூத், “குடியுரிமை சட்டம் தொடர்பாகவோ (CAA,) NRC, NPR தொடர்பாகவோ அதிகாரிகள் ஆவணங்கள் கேட்டால் கொடுக்காமல் மறுப்பதில் தவறு ஏதும் இல்லை. அதேவேளை தவறான தகவல் கொடுப்பது மட்டுமே தவறாகும், எனவே நம்மிடம் சரியான தகவல் இல்லை எனக் கூறி மறுத்துவிடலாம்” என்று தெரிவித்துள்ளர். மேலும்…

மேலும்...