நடிகை குஷ்பூ கைது!

சிதம்பரம் (27 அக் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில்,  தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது.

மேலும்...

கேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது!

திருவனந்தபுரம் (20 செப் 2020): கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (எஐஏ)நடத்திய தேடுதல் வேட்டையில் ஒன்பது அல் கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, நடத்திய தேடுதல் வேட்டையில் மேற்கு வங்கத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் என்/ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும்...

டாக்டர் கஃபீல்கான் மீதான சிறைத் தண்டனை மேலும் நீட்டிப்பு!

லக்னோ (16 ஆக 2020): சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் கஃபீல்கான் மீதான சிறைத் தண்டனையை மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்திரப்பிரதேச அரசின் உள்துறை செயலாளர் வினய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், “அலிகார் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்ட ஆலோசனை வாரியம் ஆகியவை அளித்த பரிந்துரையில், கஃபீல் கான் தொடர்ந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவை உத்திரப்பிரதேச அரசு பிறப்பித்துள்ளது” என…

மேலும்...
Plasma Donation

பிளாஸ்மா தானம் செய்வதாக சுமார் 200 பேரை ஏமாற்றிய ஹைதராபாத் மோசடிப் பேர்வழி கைது!

ஹைதராபாத் (22 ஜூலை,2020): வஞ்சகப் புத்தி கொண்டோருக்கு, சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் எப்படிப்பட்டதாக இருப்பினும் கவலை இல்லை. கொரோனா நெருக்கடியால் முழு உலகமும் குறிப்பாக நமது நாடும் தத்தளித்து கடும் நெருக்கடியில் இருக்க, இந்த சூழலிலும் ஜெகஜ்ஜால கில்லாடி ஒருவன், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மா அணுக்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிளாஸ்மா தெரபி மூலம் பிளாஸ்மா தானம் செய்வதாக சுமார் 200 பேரை ஏமாற்றியிருக்கின்றான். ஹைதராபாத்தில் வசிக்கும் சந்தீப் ரெட்டி என்பவன் 200-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி…

மேலும்...

இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

கொழும்பு (05 ஜூலை 2020) : இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர் குஷால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார் இலங்கையில் பனாதூரா என்ற பகுதியில் காரை ஓட்டிச் சென்ற குஸால் மெண்டிஸ், ஒரு முதியவர் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இதனையடுத்து இவரை கைது செய்த காவல்துறையினர் இன்று நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்கின்றனர் .

மேலும்...

அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பிரபலம் கைது!

புதுடெல்லி (17 ஜூன் 2020): அரசு அதிகாரியை செருப்பால் அடித்த டிக்டாக் பிரபலமும், பாஜக தலைவருமான சோனாலி போகத், கைது செய்யப்பட்டுள்ளர். அரியானாவில் டிக்டாக் மூலம் பிரபலமாகி பாஜ.வில் சேர்ந்தவர் சோனாலி போகத். இவர் கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் அரசு அதிகாரியை பொது இடத்தில் செருப்பால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்…

மேலும்...

இந்திய தூதரக உயர் அதிகாரிகளை பாகிஸ்தான் போலீஸ் விடுதலை செய்தது!

இஸ்லாமாபாத் (15 ஜூன் 2020): பாகிஸ்தானில் கைதான இரு தூதரக உயர் அதிகாரிகளை பாகிஸ்தான் போலீஸ் விடுதலை செய்துள்ளது. இன்று (திங்கள் கிழமை) காலை தூதரகம் வந்து சேரவேண்டிய இரு அதிகாரிகள் தூதரகம் வந்து சேரவில்லை என்றும். அவர்களை இன்று காலை முதல் காணவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவ்விருவரும் சாலை விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக…

மேலும்...

ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் கைது!

புதுடெல்லி (09 ஜூன் 2020): ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகளை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 29 வயதான விகாஸ் குமார் மற்றும் 22 வயதான சிமன் லால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதான இருவரில் விகாஸ் குமார் ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் முழுநேர பணியாளராகவும், சிமன் லால் பிகானீரில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் மையத்தில் ஒப்பந்த பணியாளராகவும் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது மேலும் பாகிஸ்தானின் முல்தானில் இருந்து இயங்கும்…

மேலும்...

கோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்!

கோவை (31 மே 2020): கோவையில் கோவிலில் இறைச்சியை வீசிய ஹரி என்பவருக்கு மனநோய் என்பதாக குற்றவாளி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள வேணுகோபால கிருஷ்ணசாமி கோயில் மற்றும் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் இறைச்சி வீசிய நபர் கைது செய்யப்பட்டார். இவரை கோயம்புத்தூர் நகர போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோவையில் உள்ள கவுந்தம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ஹரி ராம்பிரகாஷ் (48) என போலீசாரால் அடையாளம் காணப்பட்டார். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கோயில்களுக்கு அருகே பைக்…

மேலும்...

அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? – திருமாவளவன் கடும் கண்டனம்

சென்னை (23 மே 2020): திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி கைது செய்யப் பட்டிருப்பதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழக அரசு கைது செய்திருக்கிறது. தலித் மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப் போலவும், தலித் மக்களை யார் சீண்டினாலும் இழிவு படுத்தினாலும் வேடிக்கைப் பார்க்க மாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போம்…

மேலும்...