அமெரிக்க நகரங்களில் ஒலிக்கும் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)

வாஷிங்டன் (26 ஏப் 2020): அமெரிக்காவில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) பல இடங்களில் ஒலிக்கிறது. அமெரிக்காவில் ஒலிப்பெருக்கி மூலம் பாங்கு சொல்ல பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இவ்வருட புனித ரமலான் மாதத்திற்காக அக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரின் மேயர் ஜேக்கப் பிரே, நகரின் அனைத்து பகுதிகளிலும் ரமலான் மாதத்தின் அனைத்து தினங்களிலும் ஐந்து வேளைக்கும் ஒலிப் பெருக்கி மூலம் பாங்கு அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா கொரோனாவால் அதிக…

மேலும்...

சாலையில் கேட்பாடற்று கிடந்த பணம் – எடுக்க அச்சப்பட்டு போலீசுக்கு தகவல்!

சென்னை (26 ஏப் 2020): சாலையில் கேட்பாடற்று கிடந்த ரூபாய் நோட்டுகள் கொரோனாவை பரப்ப வீசப்பட்டதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொருக்குப்பேட்டை சாலையில், நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50 ரூபாய் நோட்டும் கிடந்தது. இந்த ரூபாய் நோட்டுகளை புகைப்படம் எடுத்து, இது கொரோனா தொற்று பரப்புவதற்காக அப்பகுதியில் வீசப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.கே நகர் போலீசார் ரூபாய் நோட்டுகள் இருக்கும் இடத்திற்கு…

மேலும்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர் பலி!

புதுடெல்லி (26 ஏப் 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 49 பேர் பலியாகியுள்ள்னார், மேலும் 1990 பேருக்கு, புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் பலியாகியுள்ளனர், ஆயிரத்து 990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26…

மேலும்...

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு – முதல்வர் எடப்பாடி உத்தரவு!

சென்னை (26 ஏப் 2020): ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்துடன் பணி ஓய்வுபெறும் மருத்துவர்களின் பணியை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஒப்பந்த nமுறையில் 2 மாத காலத்திற்கு பணி…

மேலும்...

ஊரடங்கில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – ஒரு பாமரனின் குரல் – வீடியோ

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதனை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இது தமிழகத்திலும் வரும் மே 3 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மது கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர் தற்போது அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக உள்ளார். அவர் இனி மது கடைகளே திறக்கக் கூடாது என்றும் என்னைப் போல் பலர் பல குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது என்…

மேலும்...

சொந்த நிலத்தை விற்று ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் சகோதரர்கள்!

பெங்களூரு (25 ஏப் 2020): லாக்டவுனால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தங்களது சொந்த நிலத்தை விற்று மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர் முஜம்மில் மற்றும் தஜம்முல் முஹம்மது சகோதரர்கள். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரும், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள், அனாதையாக கூலி வேலை பார்த்து இன்று வரை ஒன்றாகவே இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இருவரும் நிலம் பேசி விற்கும் ஏஜெண்ட்களாக பணிபுரிந்து வருகின்றனர். எனினும் சொந்தமாக அவர்களுக்கு வீடு இல்லை. இதற்காக…

மேலும்...

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை!

சென்னை (25 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மேலும் கோரோனா பரவாமல் தடுக்க டாக்டர் அன்புமணி ராமதாஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்த டாக்டர் அன்புமணி ராமதாஸின் அறிக்கை: “நேற்று புதிதாக ஏற்பட்ட தொற்றுகளில் 72% சென்னையில் ஏற்பட்டவையாகும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1,755 பேரில், 452 பேர் அதாவது 25.75% சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 15- ஆம் தேதி முதல் நேற்று வரையிலான…

மேலும்...

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி ஐந்து முக்கிய பரிந்துரைகள்!

புதுடெல்லி (25 ஏப் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு ஐந்து முக்கிய பரிந்துரைகளை வைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து, வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கு திட்டமிடப்படாத ஒன்று என காங்., விமர்சனம்…

மேலும்...

கொரோனாவால் இறப்பவர்களை எங்கள் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் – பிரதமருக்கு 9 ஆம் வகுப்பு மாணவி கடிதம்!

மதுரை (24 ஏப் 2020): கொரோனாவால் இறப்பவர்களை எங்கள் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று 9 ஆம் வகுப்பு மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி பெரு மாள்கோவில் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் மகள் தென்னரசி. வாடிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கொரோனாவால் இறப்பவர்களை அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்…

மேலும்...

பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து!

புதுடெல்லி (24 ஏப் 2020): பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் புனித ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது. ஊரடங்கு கடைபிடிக்கப்படும் சூழலில் இந்த நோன்பு தொடங்குகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ரம்ஜான் முபாரக்! அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த புனித மாதம், ஏராளமான கருணை, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தையும் கொண்டு வரட்டும்….

மேலும்...