அடுத்து என்ன? – மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி!

புதுடெல்லி (06 மே 2020): மே 17 ஆம் தேதிக்குப் பிறகு என்ன செய்யவுள்ளதாக திட்டம்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் அக்கட்சி தலைவர் திருமதி.சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங், திரு.ராகுல் காந்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் பேசிய திருமதி சோனியா…

மேலும்...

24 மணிநேரத்தில் கொரோனா குணமாகும் – சித்த மருத்துவர் கைது!

சென்னை (06 மே 2020): கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக வதந்தி பரப்பிய போலி சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட முதல் வீடியோவில், கொரோனா மட்டுமல்ல எந்த வைரஸ் வந்தாலும் அதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று சொன்னார். இதையடுத்து ஜனவரி 27ம் தேதி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தணிகாசலம், தனது ரத்னா சித்த மருத்துவமனை சார்பில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பிரகடனம்…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களுக்கே தட்டுப்பட்டு – இதில் இதன் விலை ஏற்றத்தால் குடிமகன்களுக்கு கவலை!

சென்னை (06 மே 2020): மது கடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் மதுபானங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருக்‍கும் டாஸ்மாக்‍ மதுபானக்‍ கடைகள் நாளை முதல் திறக்‍கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது திடீரென மதுபானம் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்‍கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டதால், தமிழகத்தில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து வகை மதுபானங்களும்…

மேலும்...

வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை கொரோனா அதிக அளவில் தாக்கும் – ஆராய்சியாளர்கள் தகவல்!

லண்டன் (06 மே 2020): வைட்டமின்-டி குறைபாடு உள்ளவர்களை அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்குவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. கொரோனா வைரசை ஒழிக்‍க தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா, யார் யாரை எல்லாம் தாக்குகிறது? என்பதை சில ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் அறக்‍கட்டளை மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட…

மேலும்...

சென்னை டிஜிபி அலுவலகத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (06 மே 2020): சென்னை டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில், துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர், தொழில்நுட்ப பிரிவில் ஒருவர், உளவுத்துறை கட்டுப்பாட்டு அறையில் 2 பேர், மோட்டார் வாகன பிரிவில் ஒருவர் என 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் இன்று மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், டிஜிபி அலுவலகத்தில்…

மேலும்...

இந்தியாவில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் ரத்து!

புதுடெல்லி (06 மே 2020): இந்தியா வருவதற்காக வெளிநாட்டினருக்‍கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தூதரகப் பணிகள், அலுவல்பூா்வ பணிகள், ஐ.நா.சா்வதேச அமைப்புகளின் பணிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில பிரிவுகள் தவிர, இதர பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்த அனைத்து விசா அனுமதிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கும் வரை இந்த விசா அனுமதி ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம்,…

மேலும்...

பிளாஸ்மாவை தானம் செய்வதற்காக நோன்பை முறித்த 150 தப்லீக் ஜமாஅத்தினர்!

புதுடெல்லி (06 மே 2020): கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை தானம் செய்வதற்காக 150 தப்லீக் ஜமாஅத்தினர் ரம்ஜான் நோன்பை முறித்துக் கொண்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மாற்று முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒருமுறை பிளாஸ்மா சிகிச்சை முறை. இதற்கு பிளாஸ்மா தானம் செய்ய, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த தப்லீக் ஜமாஅத்தினர் அதிக அளவில் முன்வந்துள்ளனர்….

மேலும்...

தமிழகத்தை அதிர வைக்கும் கொரோனா – இப்போதைக்கு இதுதான் சிங்கிள் சோர்ஸா?

சென்னை (06 மே 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 600க்கும் அதிகமானோருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவி உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில்…

மேலும்...

சென்னையில் அனைத்து கடைகளையும் திறக்க மாநகராட்சி அனுமதி!

சென்னை (06 மே 2020): சென்னையில் நாளை அனைத்து தனிக் கடைகளையும் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்க, இந்தியாவில், 42 ஆயிரத்து, 533 பேர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில், 11 ஆயிரத்து, 706 பேர், குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்; 1,373 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த, 24 மணி நேரத்தில், 1,074 பேர், குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைவோர் விகிதம், 28 சதவீதமாக உயர்ந்துள்ளது….

மேலும்...

அறிகுறியின்றி கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை – தமிழக அரசு முடிவு!

சென்னை (05 மே 2020): அறிகுறியின்றி கொரோனா பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது. இதனால் கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல்…

மேலும்...