கொரோனாவுக்காக கோவிலில் நடந்த கொலை – கோவில் பூசாரியின் கொடூர செயல்!

கட்டாக் (28 மே 2020): கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி கோவிலில் வைத்து ஒருவரின் தலையை வெட்டி கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளார் கோவில் பூசாரி ஒருவர். ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலின் உள்ளே புதன்கிழமை இரவு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்றை கண்டெடுத்தனர் போலீசார். உடனே இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலையானவரின் பெயர் சரோஜ் குமார் பிரதான் என்ற 52 வயது உள்ளுர் நபர் என்பது…

மேலும்...

இந்துத்வா அமைப்பினர் கைது!

எர்ணாகுளம் (27 மே 2020): தேவாலயம் செட்டை உடைத்தெறிந்தது தொடர்பாக இந்துத்வா அமைப்பினர் இருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர்…

மேலும்...

இந்து அமைப்பினரால் கோவில் அருகே இருந்த தேவாலயம் செட் இடித்து தகர்ப்பு!

எர்ணாகுளம் (25 மே 2020): சினிமா படபிடிப்பிற்காக கோவில் அருகே போடப்பட்டிருந்த சர்ச் செட் இடிக்கப்பட்டது. பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர் கோயில் முன் தேவாலயம்…

மேலும்...

இந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்!

இஸ்லாமாபாத் (15 மே 2020): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி லாக்டவுன் காலத்தில் இந்து கோவில்களில் ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தார். தனது நிவாரணப் பணிகளின் புகைப்படங்களைப் சமூக வலைதலங்களில் பகிர்ந்து கொண்டுள்ள அப்ரிடி, , “நாங்கள் கொரோனாவை ஒழிப்பதில் ஒன்றாக இருக்கிறோம், அதேபோலை இதில் ஒன்றாகவே வெற்றி பெறுவோம். ஒற்றுமை எங்கள் பலம். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக ஸ்ரீ லட்சுமி நரேன் கோவிலுக்குச் சென்று உதவினேன்” என்று தெரிவித்துள்ளார். அப்ரிடியின்…

மேலும்...

ஜோதிகாவின் பேச்சு – திமுக வை வம்புக்கு இழுத்த நடிகை!

சென்னை (25 ஏப் 2020): ஜோதிகா கோவில் குறித்து பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும் பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம், திமுகவையும் இதில் இணைத்து வம்புக்கு இழுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் பேசும்போது, “கோயிலுக்காக நிறைய காசு கொடுக்கிறீங்க.. பெயிண்ட அடித்து பராமரிக்கிறீர்கள். அதே போல ஸ்கூல்கலுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்..இவைதான் நமக்கு முக்கியம். அதனால் அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் மற்றும் இந்துத்வாவினர்…

மேலும்...

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடந்த மற்றும் ஒரு நிகழ்ச்சி!

ஈரோடு (06 மார்ச் 2020): ஈரோடு அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மற்றும் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மசூதி முன்பு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அதன் அருகே மசூதியும் உள்ளது. அந்த கோயிலில் மார்ச் 1ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று…

மேலும்...

முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்!

காசர்கோடு (18 பிப் 2020): கேரளாவில் முஸ்லிம் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்த பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். கேரளாவின் காசர்கோடு பகுதியில் வசித்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணின் பெற்றோர் சிறு வயதிலேயே மரணம் அடைந்து விட்டனர். அனாதையாக இருந்த ராஜேஸ்வரியை, அப்துல்லா, கதீஜா தம்பதிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அப்துல்லா, கதீஜா தம்பதிகள் விஷ்ணு பிரசாத் என்பவருக்கு கேரளாவின் காசர்கோடு பகவதி கோவிலில் வைத்து…

மேலும்...

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா

திருத்தணி (08 பிப் 2020): திருத்தணி முருகன் கோவிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும்,…

மேலும்...

கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை!

வேலூர் (08 பிப் 2020): வேலூர் அருகே கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கொசப்பேட்டை திருப்பூர் குமரன் தெருவில் வசித்து வந்தவர் கட்டிட மேஸ்திரி குட்டி (எ) குமரவேல்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவர் கொசப்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில்க்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வந்து சென்றபடி இருந்துள்ளனர். பிப்ரவரி 7 ந்தேதி இரவு…

மேலும்...

குற்றாலம் திருக்குற்றால நாதர் சுவாமி கோயில் திருவிழா!

குற்றாலம் (10 ஜன 2020): தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றால நாதர் சுவாமி கோயில் திருவாதிரை திருவிழா ஜனவரி 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும் அருள்மிகு நடராஜர் திரு தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்ற திருக்குற்றாலத்தில் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு மிக்கதுமான மார்கழி திருவாதிரை திருவிழா ஜனவரி ஒன்றாம் தேதியன்று விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் காலை மாலையில் சுவாமி…

மேலும்...