கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை!

கோவை (22 ஜூலை 2022): கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரமணா (28) என்ற இளைஞர் கோவை ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றி கோவை ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும்...

செந்தில் பாலாஜி காட்டில் மழை!

கோவை (11 மார்ச் 2022): தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக கோவை மாவட்ட வெற்றியானது முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கிடைத்த வெற்றிக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கொண்டாடி தீர்த்துவிட்டார் அவர். இதற்கிடையில் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 40. இவர் கோவையின் 6வது…

மேலும்...

கோவை தனியர் பள்ளியில் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் – 5 பேர் மீது வழக்கு பதிவு!

கோவை (01 ஜன 2022): கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை தொடர்ந்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு எதிராக த.பெ.தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த நபர்களை காவல்துறையினர் உள்ளே செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால், காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம்,…

மேலும்...

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! கோவை (20 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கேரளா, ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில செயலர் ஷான் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து, 12 மணி நேரத்துக்குள் பா.ஜ.,வை சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதனால்…

மேலும்...

அந்த ஜாதியால்தான் அங்கு போட்டியிடவில்லை – கமல் பகீர் தகவல்!

சென்னை (14 மார்ச் 2021): மயிலாப்பூரில் போட்டியிடாததற்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து கமல்ஹாசன் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டால் ஜாதியோடு என்னை இணைத்து சொல்லிவிடுவார்கள், அது எனக்கு பிடிக்காத விஷயம்…

மேலும்...

கோயில்கள் அருகே டயர்களை எரித்து பரபரப்பை கிளப்பிய கஜேந்திரன் என்பவர் கைது!

கோவை (20 ஜூலை 2020): கோவையில் கோயில்கள் அருகே டயர்களை எரித்து பரபரப்பை கிளப்பிய கஜேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை டவுன்ஹால் என்.எச்.சாலை ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. அங்கு கோவிலை சுத்தம் செய்ய வரும் பெண், அங்கு ஒருவர் கோவில் முன்பு டயர்களை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதற்குள் அந்த நபர் அங்கிருந்து போய்விட்டார். உடன் கோவிலுக்கு…

மேலும்...

கோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்!

கோவை (31 மே 2020): கோவையில் கோவிலில் இறைச்சியை வீசிய ஹரி என்பவருக்கு மனநோய் என்பதாக குற்றவாளி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள வேணுகோபால கிருஷ்ணசாமி கோயில் மற்றும் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் இறைச்சி வீசிய நபர் கைது செய்யப்பட்டார். இவரை கோயம்புத்தூர் நகர போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோவையில் உள்ள கவுந்தம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ஹரி ராம்பிரகாஷ் (48) என போலீசாரால் அடையாளம் காணப்பட்டார். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கோயில்களுக்கு அருகே பைக்…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களுக்கு கூட அனுமதி இல்லை – கோவையில் அதிரடி!

கோவை (14 ஏப் 2020): கோவையில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடத்தில் முதலில் சென்னையும் அடுத்து கோவையும் இருக்கிறது. இதனால் கோவையில் உள்ள 14 முக்கிய இடங்களை மாவட்ட நிர்வாகம் முழுவதுமாக முடக்கியுள்ளது. அதில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மேட்டுப்பாளையம், மேட்டுக்கடை, சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், மீன்…

மேலும்...

கோவை ஈஷா மையத்தின் உண்மை முகம் – பாதிக்கப் பட்ட பெண்ணின் தாய் பகீர் தகவல்(வீடியோ)

கோவை ஈஷா மைய‌ம் குறித்து அவ்வப்போது பதற வைக்கும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அப்போதே பலர் அந்த மைய‌ம் குறித்தும் சத்குருவின் மோசடிகளை வெளியே கூறியபோதும் சத்குரு அவரது செல்வாக்கை பயன்படுத்தி யோகா மையம் குறித்த எந்த மோசடி தகவல்களும் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார். மக்களும் மறந்து விட்டனர். ஆனால் இவர்கள் போன்ற மோசடி பேர்வழிகளுக்கு ஆளும் அரசின் ஆதரவு…

மேலும்...

கொரோனா வைரஸும் காதர் பாயின் மனிதாபிமானமும்!

கோவை (27 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக நாடெங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை காதர் பாய் அவரால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளார். கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்த காதர், உக்கடம் லாரிபேட்டையில் மீன் கடை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது தனக்கு சொந்தமான 15 வீடுகளையும் கூலி தொழிலாளிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். இந்நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது வீட்டில் தங்கியுள்ள கூலி தொழிலாளிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களின்…

மேலும்...