கொரோனா வைரஸ் – சர்வதேச அவசரநிலை அறிவிப்பு!

பீஜிங் (01 பிப் 2020): சீனாவில் உருவாகி 22 நாடுகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதைத் தொடா்ந்து, ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு சா்வதேச சுகாதார அவசர நிலை அறிவித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை அவசரமாகக் கூடி இதுதொடா்பாக விவாதித்தது. அதனைத் தொடா்ந்து, புதிய வகை கரோனா வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார…

மேலும்...

சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

புதுடெல்லி (01 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் புதுடெல்லி வந்ததடைந்தனர். கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். இது சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸ் குறித்து சீனாவிலிருந்து வந்த தமிழக வாலிபர் கூறுவது இதுதான்!

சென்னை (31 ஜன 2020): உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒருபுறமிருக்க அதுகுறித்த வதந்திகளும் பரவி வருகின்றன. சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய 78 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என அவர்களை தனிக் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற மாணவர் சீனாவில் செஜியாங்க் நகரில் உள்ள நிங்போ பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம்…

மேலும்...

சீனாவிலிருந்து வந்த தமிழருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு?

திருவண்ணாமலை (31 ஜன 2020): சீனாவிலிருந்து தமிழகம் வந்த பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் பலியானவா்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 7, 711 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை…

மேலும்...

இந்தியாவில் கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

திருவனநதபுரம் (30 ஜன 2020): கேரள மாநிலத்தில் சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில். சீனாவில் இந்த வைரசால் 170 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 800 க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்திய சோதனையில் சீனாவின் வுஹானிலிருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...

கொரோனா வைரஸின் பலி எண்ணிக்கை 170 ஆனது – மேலும் அதிகரிக்கும் அபாயம்!

பீஜிங் (30 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆனது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 7,700 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும்…

மேலும்...

கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்காதாம்!

புதுடெல்லி (30 ஜன 2020): கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்துள்ள சீனாவில் இருந்து விமானம் மூலம் அதிக பயணிகள் வரும் நாடுகளின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து, கரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த 30 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சௌதாம்டன் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் இந்த பட்டியலில், கரோனா வைரஸ் பரவும் ஆபத்து நிறைந்த நாடுகள் மற்றும் முக்கிய நகரங்களின் பட்டியலில் 23வது இடத்தில்…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – சீனா செல்லும் விமானங்கள் ரத்து!

லண்டன் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சீனா செல்லும் பெரும்பாலான நாடுகளின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்–்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்த எண்ணிக்கை 132ஐ எட்டியது. வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், சீனாவுக்கான விமான சேவையை உலக நாடுகள் ரத்து செய்து வருகின்றன. சீனாவின் ஹூபெய்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (29 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வந்த ஒரெ குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது….

மேலும்...

கொரோனா வைரஸ்: 6000 பேர் பாதிப்பு – 132 பேர் பலி!

பீஜிங் (29 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது…

மேலும்...