சசிகலாவுடன் இணையும் முக்கிய அரசியல் பிரபலங்கள் – கலக்கத்தில் எடப்பாடி!

சென்னை (24 பிப் 2021): வி.கே சசிகலாவை முக்கிய அரசியல் பிரபலங்கள் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்தார். அதேபோல், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமும், கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் சூடுப்பிடித்துள்ள நிலையில், சசிகலாவை சரத்குமார், சீமான் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்திருப்பது முக்கியத்துவம்…

மேலும்...

அதென்ன சீமான் இப்படி சொல்லிட்டார் – அப்படின்னா அதிமுகவுடைய நிலை?

சென்னை (30 டிச 2020): திமுகவுக்கு சரியான போட்டி நாம் தமிழர்தான் அதிமுகவல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாள்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அவர் மறைந்து…

மேலும்...
Vijayalakshmi

பிரபல நடிகை தற்கொலை முயற்சி:சீமான், ஹரி நாடார் மீது குற்றச்சாட்டு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நடிகை விஜயலட்சுமி தற்போது திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளர்.தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல மலையாள டைரக்டர் சித்தீக் இயக்கத்தில் ஹிட்டான ஃபிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர்தான் இந்த விஜயலட்சுமி. தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் மீது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்…

மேலும்...

ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க சீமான் வலியுறுத்தல்!

சென்னை (06 ஜுலை 2020): ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி…

மேலும்...

செளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன்? – சீமான் அதிரடி கேள்வி!

சென்னை (28 மே 2020): எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் செளகிதார் மோடி அமைதியாக இருப்பது ஏன் கொரோனா பயமா? என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே…

மேலும்...

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த சீமான்!

சென்னை (23 மே 2020): இஸ்லாமியக் கூட்டமைப்பு தலைவர்கள் சீமானை சந்தித்ததை தொடர்ந்து, சீமான் மீது கடந்த ஒரு வாரமாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது. நேற்று 22-05-2020 வெள்ளிக்கிழமை மாலை, ‘நாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்ற இச் சந்திப்பில், பல்வேறு விஷயங்கள் மனம் விட்டு பேசப்பட்டன. எழுப்பப் பட்ட கேள்விகள் குறித்து சீமான் விளக்கம் அளித்தார்….

மேலும்...

சீமான் மீது தேச துரோக வழக்கு – கோவையில் அப்படி என்ன பேசினார்?

கோவை (09 மே 2020): நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த “ஷாகின்பாக்” போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக பேசியிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் 72 ஆண்டுகால இந்தியாவில் பல அரசுகள் ஆண்டு இருக்கின்றன எனவும் இத்தனை ஆண்டுகளில் யார் இந்தியன் என்று கூட தெரியாமல் இருந்திருக்கின்றனர் என…

மேலும்...

அதிமுக அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் – சீமான் பரபரப்பு அறிக்கை!

சென்னை (13 ஏப் 2020): கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிமுக அரசுடன் இணைந்து பணியாற்ற நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நோய்த்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பேரிடர் காலத்தில் உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் வழியின்றி அல்லல்படும் மக்களுக்கு உதவும்பொருட்டு அர்ப்பணிப்போடு களமிறங்கி தொண்டாற்றும் தன்னார்வலர்களின் பணிகளுக்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பது முறையல்ல! மழை, வெள்ளம், புயல் தொடங்கி கொரோனோ…

மேலும்...

இன்று திடீரென இணையங்களில் ட்ரெண்ட் ஆகும் சீமான்!

சென்னை (13 ஏப் 2020): தமிழகம் சார்பாக ஆர்டர் செய்திருந்த ரேபிட் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு கைபற்றியது குறித்து வெளியான செய்திக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள ரேபிட் சோதனை கருவிகளை தமிழகம் ஆர்டர் செய்திருந்தது. அந்த ரேபிட் சோதனை கருவிகள்…

மேலும்...

ரஜினிக்கு சீமான் திடீர் ஆதரவு!

சென்னை (27 பிப் 2020): ரஜினி கர்நாடகாவில் கட்சி தொடங்கினால் ஆதரவளிப்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்து பல மாதங்கள் ஆனாலும் இன்னும் கட்சி தொடங்கவில்லை. எனினும் அவ்வப்போது ஏதாவது சொல்லி சிக்கலில் சிக்கிக் கொள்வது வாடிக்கை. சமீப காலமாக ரஜினியை சீமான் அதிகமாக விமர்சித்து வந்தார். தற்போது சற்று அதனை தவிர்த்துவ் வருகிறார். மேலும் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து இணையதள பாசறை நாம் தமிழர் கட்சியினருடன்…

மேலும்...