சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை (30 டிச 2021): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 8 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மழைநீர் தேக்கம் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, போக்குவரத்து நெரிசல், மழைநீர் தேக்கம் போன்றவற்றால் பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

மேலும்...

சென்னையில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டம்!

சென்னை (27 டிச 2021): சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள டி-பிளாக் வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் விரிசல் ஏற்பட தொடங்கியதை கண்ட மக்கள், அப்படியே துரிதமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு துறையும் மீட்புப்பணியினரும் தேடுதல் பணியை நடந்து வருகின்றனர். இந்த விபத்தில் கிட்டத்தட்ட 24 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதனால் அப்பகுதியில்…

மேலும்...

சென்னையில் மீண்டும் பின்னி எடுக்கும் கனமழை!

சென்னை (16 நவ 2021): சென்னையில் செவ்வாயன்று இரவு மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்தது. தற்போது ஓரளவுக்கு மழையிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் சென்னையில் சென்னையில் செவ்வாயன்று இரவு மீண்டும் மழை பெய்து வருகிறது. மீண்டும் மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும்...

சிங்கப்பெண்ணே – ஹேட்ஸ் ஆஃப் பெண் போலீஸ் ராஜேஸ்வரி!

சென்னை (11 நவ 2021): உயிருக்குப் போராடியவரை தன் தோளில் சுமந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த பெண் போலீஸ் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பணிபுரிந்த உதயா, கனமழை காரணமாக கல்லறையிலேயே தங்கி இருந்தார். மழையில் நனைந்ததால், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அப்பகுதி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த டி.பி. சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவரை, தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து…

மேலும்...

மழை காரணமாக சென்னையில் 4 விமானங்கள் ரத்து

சென்னை (10 நவ 2021):சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கிளம்பும் மற்றும் சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும்...

தமிழகத்தில் நவம்பர் 13ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை(1 நவ 2021): தமிழகத்தில் நவம்பர்,13ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்கனவே ஒன்று உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (நவ.11) கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்க்கும் என ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

சென்னையில் நில நடுக்கம்!

சென்னை (24 ஆக 2021): வங்கக்கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீட்டர் கிழக்கு திசையில் வங்கக் கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னை அடையாறு, திருவான்மியூர், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும்...

சென்னையில் இலவச வை-ஃபை WI-FI !

சென்னை (17 ஆக 2021): சென்னையில் 46 இடங்களில் WI-FI ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் 30 நிமிடங்களுக்கு இலவச WI-FI தொடர்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல் தெரிந்துகொள்ளலாம். WI-FI வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கம்பங்களில் கூடுதல் வசதிகளும் இடம்பற்றுள்ளது. WI-FI வசதியைப் பெறுவதற்கு மொபைல் எண்ணைப் பதிவு செய்து ஒடிபி மூலம் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலலாம்….

மேலும்...

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு!

சென்னை (10 அக் 2020): கொரோனா பரவல் சென்னையில் மீண்டும் அதிக அளவில் உள்ளதால் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்படும் மக்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தளர்வுகளை அளித்துள்ளது தமிழக அரசு. கொரோனா பரவல் நூற்றுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருந்த போது நாம் முழு பொதுமுடக்கத்தில் இருந்தோம். தற்போது அனுதினமும் ஆயிரங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. இந்த சமயம் தளர்வுகளோடு இருக்கிறோம். எனில், நிலைமைக்கு ஏற்ப பாதுகாப்பாக நடந்து…

மேலும்...

மகிழ்ச்சியில் சென்னை மக்கள் – காரணம் இதுதான்!

சென்னை (11 ஆக 2020): சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் குறைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, சேப்பாக்கம், மெரினா, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனப் போக்குவரத்துக்குச்…

மேலும்...