சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சென்னை (22 பிப் 2020): சென்னைக்கு ஆறு மாதத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின் மூலம் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை என்றாலும் ஓரளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது. தற்போது சென்னைக்கு கடல் நீர் குடிநீர் திட்டம், வீராணம் ஏரி போன்றவை கை கொடுத்து வருகிறது. 4 ஏரிகளில் இருந்தும் தினமும் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. மேலும் சென்னைக்கு…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – கேரள முதல்வர் சென்னை வருகை!

சென்னை (21 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பங்கேற்கிறார். நாடெங்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஷஹீன் பாக்கை பின்பற்றி நாடெங்கும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை, கோவை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது….

மேலும்...

சட்டத்தை மதித்து நடந்த சென்னை பேரணி – தேசிய கீதத்துடன் நிறைவு!

சென்னை (19 பிப் 2020): சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 6- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலைவாணர்…

மேலும்...

சென்னை சிஏஏ பேரணி நிறைவு!

சென்னை (19 பிப் 2020): சென்னையில் ஜமாத்துல் உலமா சபை தலைமையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நிறைவு பெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை சென்னை ஷஹீன் பாக்காக மாறி  இங்கு 6- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்: தொடரும் 6 வது நாள் போராட்டம்!

சென்னை (19 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டம் தொடர்ந்து 6 வது நாளாக தொடர்கிறது. டெல்லி ஷஹீன் பாக் மாடலாக சென்னையிலும் 6-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு அவ்வப்போது உணவு, குடிநீர், சர்பத், பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை போராட்டக்குழுவினர் வழங்கி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை…

மேலும்...

சென்னையில் ஷஹீன் பாக் – மீடியா ஒன் தொலைக்காட்சியின் முழு கவரேஜ் – VIDEO

சென்னை (16 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லி ஷஹீன் பாக்காக மாறியுள்ள நிலையில் சனிக்கிழமை போராட்டக் களத்தை நேர்மையாக செய்தி தந்துள்ளது மலையாள சேனலான மீடியா ஒன் தொலைக்காட்சி. குறிப்பாக பெரும்பாலான எதிர் கட்சிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. குறிப்பாக கட்சி, மத பேதமின்றி அதிமுக, பாஜக தவிர அனைத்து சமூகத்தினரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதை இப்போராட்டக் களம் காட்டுகின்றது. தமிழக சட்டமன்றத்தில் கேரளா, பஞ்சாபைப் போன்று குடியுரிமை…

மேலும்...

சென்னை போலீஸ் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து, மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...

சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்களிடையே பயங்கர ஆயுதங்களுடன் மோதல்!

சென்னை (04 பிப் 2020): சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழத்தில் இரண்டு குழுவாக கேன்டீனுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர் இந்த சண்டையில் கத்தி, கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியதால் அங்கு கூடியிருந்த மாணவர்கள் பதறியடித்து ஓடினர். கையில் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் செல்போனில் பதிவு செய்து…

மேலும்...

சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

சென்னை (03 பிப் 2020): சென்னை அயனாவரம் சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை இன்று அறிவிக்கப் பட்டது. சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில், பெற்றோருடன் வசித்து வந்தவர், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி. அவரை, அதே குடியிருப்பில் வேலை செய்த காவலாளி பழனி, 40; பிளம்பர் ஜெய்கணேஷ், 23; லிப்ட் ஆப்பரேட்டர்கள் தீனதயாளன், 50; பாபு, 36, உட்பட, 17 பேர், பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த, 2018 ஜனவரி முதல், ஜூன் வரை,…

மேலும்...

சென்னையில் போராட்டம் நடத்த தடை!

சென்னை (28 ஜன 2020): சென்னையில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை நகரில் இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், உண்ணாவிரதம், மனிதசங்கிலி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சென்னை காவல் ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...