ரூ. 37 லட்சம் மருத்துவ செலவுக்கு பொறுப்பேற்ற சவூதி நஜ்ரான் கவர்னர் அலுவலகம் – உதவிய இந்தியன் சோஷியல் ஃபோரம்!

ஜித்தா (10 ஜூலை 2020): இந்தியன் சோசியல் ஃபோரத்தின் முயற்சியால் ஏழு மாதக் குழந்தையின் மருத்துவச்செலவு 37 இலட்சம் ருபாய்க்கு பொறுப்பேற்றது சவூதி அரேபியா-நஜ்ரான் கவர்னர் அலுவலகம். கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளத்தை சார்ந்தவர் ஜோஸ்பின் இவர் சவூதி அரேபியா நஜ்ரானில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகின்றார் ஜோஸ்பின் அவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது இக்குழந்தை பிரசவ காலம் முழுமையடையாமல் 7 மாதத்திலே பிறந்துள்ளது. • குழந்தைக்கு…

மேலும்...

ஜித்தாவிலிருந்து சென்னை சென்ற பயணிகளுக்கு உறுதுணையாக இருந்த ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் தமுமுக!

ஜித்தா (10 ஜூலை 2020): ஜித்தா தமிழ் சங்கம் (JTS) ஏற்பாடு செய்த   Saudia Chartered Flight 245 பயணிகளுடன் கடந்த 9-7-2020 அன்று ஜித்தாவிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றடைந்தது. முன்னதாக ஜித்தாவில் பயணிகளை வழியனுப்பி வைக்கும்போது ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் சிராஜ், ஜெய்சங்கர், பிரேம்நாத், பேரரசு, இஜாஸ் அஹ்மத், காஜா மொஹிதீன் மற்றும் பல JTS உறுப்பினர்களும்   அனைத்து பயணிகளுக்கும் தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பயணிகளை ஜித்தா…

மேலும்...

கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானம் – வழியனுப்பிய தமுமுகவினர்!

ஜித்தா (06 ஜூன் 2020): கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் சென்ற 151 தமிழர்களை தமுமுக தன்னார்வலர்கள் வழியனுப்பி வைத்தனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு பகல் 3 மணியளவில் 32 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 151 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. ஜித்தா இந்திய தூதரக அதிகாரிகள் ஹம்னா மரியம் மற்றும் அம்ஜத் ஆகியோர் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சிராஜூதீன், ரமணா மற்றும் ஜித்தா…

மேலும்...

ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் திறப்பு!

ஜித்தா (29 மே 2020): ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் இயங்கும் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்திய தூதரகம் தொடர்பான பணிகள் (அவசர தேவைகள் தவிர) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரங்கு படிப்படியாக குறைக்கப்படவுள்ள நிலையில், இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான ஜித்தா ஹைல் சாலை VFS Global அலுவலகம் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் இயங்கும். மேலும்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்!

ஜித்தா (28 மே 2020): கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர் பல்லடத்தைச் சார்ந்த தமிழர் (வயது 53), 23-5-2020 அன்று சிகிச்சை பலனின்றி சவுதி அரேபியா, ஜித்தாவில் மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்தியன் சோசியல் ஃபோரத்தின் ஜித்தா தமிழ் மாநில நிர்வாகிகள் ஊரடங்கின் போதும் முன்னின்று செய்தனர். இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் சட்ட ரீதியான அனைத்து ஆவணங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்பித்து குறுகிய நேரத்தில் நல்லடக்கம் செய்வதற்கான…

மேலும்...

கலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா!

ஜித்தா (28 மே 2020): கொரோனோ நுண்கிருமி தொற்று பேரிடர் 24 மணி நேர ஊரடங்கில்… விடுமுறை காலத்தில்… ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய விகடகவி 2.0 எனும் நகைச்சுவை கலந்துரையாடல் நிகழ்ச்சியான Lockடவுன் கலாட்டா நிகழ்ச்சி நடந்தது. சென்ற டிசம்பர் மாதம் ஜெத்தா மாநகரில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் நிகழ்ச்சியான விகடகவியில் நவீன விகடகவி எனும் விருதினைப் பெற்ற கலக்கப் போவது யாரு சீசன் 7 இன் வெற்றியாளர் அசார் மீண்டும் இந்த…

மேலும்...

ஜித்தா இந்திய தூதரகத்தில் நடந்த குடியரசு தினம்!

ஜித்தா (28 ஜன 2020): ஜித்தா இந்திய தூதரகத்தில் கடந்த 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சவூதி வெளியுறவுத்துறை அதிகாரி ஹானி காஷிஃப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவர்களும் இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய கன்சுல் ஜெனரல் பேசுகையில், இந்தியா சவூதி அரேபியா இடையேயான உறவுகள் குறித்தும், மெக்கா வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு சவூதி அரசு கொடுக்கும் மதிப்பு வாய்ந்த உபசரிப்புகள் குறித்தும் வாழ்த்தி…

மேலும்...

சவூதி ஜித்தாவில் சினிமா நட்சத்திரங்கள் களமிறங்கும் மெகா ஷோ!

ஜித்தா (27 ஜன 2020): சவூதி அரேபியா ஜித்தாவில் பிரபல மலையாள சினிமா நட்சத்திரங்கள் பங்குபெறும் மெகா ஷோ, எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. சவூதி பொழுதுபோக்குத் துறை ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவசி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் பல பிரபல இசைக் கலைஞர்கள், காமெடி நடிகர்கள் உட்பட 100 கலைஞர்கள் பங்கு பெற்று மகிழ்விக்க உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடம்…

மேலும்...