ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு!

புதுடெல்லி (26 பிப் 2020): ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற டிரம்புக்கு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வந்த டிரம்பை, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் ஆகியோர்…

மேலும்...

ட்ரம்ப், மோடி பேசிக்கொண்டிருந்தபோது ஸ்டேடியத்திலிருந்து கலைந்து சென்ற மக்கள் – வீடியோ!

அஹமதாபாத் (24 பிப் 2020): குஜராத்தில் அஹமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மோடி பேசிக்கொண்டு இருந்தபோது பொதுமக்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்பும் உரையாற்றினர். ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். அப்போது, “எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த…

மேலும்...

ஹய் டீ & நமஸ்தே ட்ரம்ப் – இல்திஜா முஃப்தி பரபரப்பு டிவீட்!

புதுடெல்லி (24 பிப் 2020): அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மஹபூபா முஃப்தியின் மகள் பரபரப்பு ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருகை புரிந்துள்ளார். இரு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிரம்ப் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. விமானத்தில் இருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்…

மேலும்...

இந்தியவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா இந்தியா இடையே ஒப்பந்தம்!

புதுடெல்லி (24 பிப் 2020): இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களை வழங்கும் வகையில், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:- இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக…

மேலும்...

இந்தியா வந்தார் ட்ரம்ப் – பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!

அஹமதாபாத் (24 பிப் 2020): இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். ஆமதாபாத் விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் 11.40க்கு வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோரை பிரதமர் மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர். இசைக் கருவிகள் முழங்க, பல்வேறு கலாசார நடன நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அமெரிக்க…

மேலும்...

அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி!

சென்னை (23 பிப் 2020): இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ட்ரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு…

மேலும்...

டொனால்ட் ட்ரம்பின் குஜராத் நிகழ்ச்சிகள் ரத்து!

புதுடெல்லி (20 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் நிலையில் தாஜ்மகாலை பார்க்க விரும்புவதால் குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிரம்ப் 2 நாள் பயணமாக வருகிற திங்கட்கிழமை (24-ந்தேதி) இந்தியா வருகிறார். “ஏர்வோர்ஸ்” சிறப்பு விமானம் திங்கட்கிழமை மதியம் 11.55 மணிக்கு ஆமதாபாத் வந்து சேரும். ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அவர் நேரடியாக மோதிரா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு செல்கிறார். குஜராத் பயணத்தின் போது மோதிரா கிரிக்கெட்…

மேலும்...

பாஜக அரசு அடிமை அரசாகிவிட்டது – சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (17 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகைக்காக, மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் அனைத்தும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இதுகுறித்து வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையால், குடிசைகளை மறைக்க சுவர் எழுப்புவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் இந்தியாவின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. ட்ரம்ப் வருகையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படப்போவதும் இல்லை, புதிதாகக் கட்டப்படும் சுவருக்குப்…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகை!

புதுடெல்லி (11 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளளார். அவரது வருகையை வெள்ளை மாளிகை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஜனவரி 16ஆம் தேதி…

மேலும்...

ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை – அமெரிக்கா விருப்பம்!

நியூயார்க் (09 ஜன 2020): இரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை அமெரிக்க வான்வெளி தாக்குதல் மூலம் வெள்ளிக்கிழமை கொலை செய்தது. இந்த சம்பவத்தால் ஈரானில் பெரும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈராக்கின் அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இதில் உள்ள சேத விவரங்கள் குறித்து அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே ஐ.நாவுக்கு அமெரிக்க அதிபர் கடிதம் எழுதியுள்ளார். ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி…

மேலும்...