இந்தியாவில் ட்விட்டருக்கு தடை வருமா?

புதுடெல்லி (08 பிப் 2021): இந்திய அரசின் கோரிக்கைக்கு ட்வீட்டர் சமூக வலைத்தளம் இதுவரை பதிலளிக்காததால் ட்வீட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும் என தெரிகிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 1,000 க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்குமாறு ட்விட்டரை மத்திய அரசாங்கம் கேட்டுள்ளது. நீக்கக் கோரப்பட்ட 1178 ட்விட்டர் கணக்குகள் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் கணக்குகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் வேலைநிறுத்தம் குறித்து தவறான மற்றும் ஆத்திரமூட்டும் செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை…

மேலும்...

கங்கனா ரனாவத்தின் பதிவுகள் மீது ட்விட்டர் அதிரடி நடவடிக்கை!

புதுடெல்லி (05 பிப் 2021): நடிகை கங்கனா ரனாவத்தின் விவசாயிகளுக்கு எதிரான பதிவுகளை நீக்கம் செய்து ட்விட்டர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பலர் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டரில், ’நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது இந்தியா வலுவாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு…

மேலும்...

அமித்ஷாவின் புகைப்படம் நீக்கம் ஏன்? – ட்விட்டர் விளக்கம்!

புதுடெல்லி (13 நவ 2020): மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சுயவிவர புகைப்படத்தை ட்விட்டர் திடீரென நீக்கியது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமித் ஷாவின் ட்விட்டர் கணக்கில் சுயவிவர படம் நேற்று திடீரென ட்விட்டரால் அகற்றப்பட்டது. ட்விட்டரின் நடவடிக்கை பதிப்புரிமை மீறலை அடிப்படையாகக் கொண்டது. என்பதாக ட்விட்டர் அப்போது தெரிவித்திருந்தது. இந்நிலையில் ‘கவனக்குறைவான பிழை காரணமாக, எங்கள் உலகளாவிய பதிப்புரிமை கொள்கைகளின் ஒரு பகுதியாக அமித் ஷாவின் ட்விட்டர்…

மேலும்...

ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ரஜினி பட நாயகி!

மும்பை (22 ஜூன் 2020): பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் தைரியமான சிலரில் ஒருவர் என்று இவருக்குப் பெயருண்டு! கடந்த வருடம் இராமாயணம் குறித்த கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் இவர் அளித்த பதிலை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை சோனாக்ஷி. இதற்கான காரணத்தை தனது…

மேலும்...

மோடியை பின் தொடர்வதை நிறுத்திய வெள்ளை மாளிகை!

வாஷிங்டன் (29 ஏப் 2020): ட்விட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்ந்து வந்த வெள்ளை மாளிகை தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. 22 மில்லியன் பின் தொடர்பாளர்களை கொண்ட வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகம் ஆகிய டுவிட்டர் கணக்குகளை பின் தொடர்ந்திருந்தது. இந்நிலையில், தற்போது மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கணக்குகளை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளது.. தற்போது வெறும்…

மேலும்...

வெறுப்பைதான் நீங்கள் கைவிட வேண்டும் சமூக வலைதளங்களை அல்ல – மோடிக்கு ராகுல் அட்வைஸ்!

புதுடெல்லி (03 மார்ச் 2020): சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற எண்ணுவதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று திடீரென ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக வலைதளக் கணக்குகளை விட்டு நீங்கிவிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதேவேளை “நான் எதுவும் பதிவிட மாட்டேன், உங்களைப் பதிவிட வைப்பேன்” என்றும் கூறியுள்ளார். மோடியின் இந்த அறிவிப்பை…

மேலும்...

சமூக வலைதளங்களிலிருந்து மோடி விலகல் – திடீர் அறிவிப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் தாம் விலகத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று திடீரென ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக வலைதளக் கணக்குகளை விட்டு நீங்கிவிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதேவேளை “நான் எதுவும் பதிவிட மாட்டேன், உங்களைப் பதிவிட வைப்பேன்” என்றும் கூறியுள்ளார். உலகின் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்ட மோடி எதற்காக சமூகதளத் தொடர்புகளைக் கைவிட வேண்டும்…

மேலும்...

டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ ட்விட்டரில் உண்மையில் பதிந்தது என்ன?

புதுடெல்லி (15 பிப் 2020): டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ அமானதுல்லா கான் ட்விட்டரில் பதிந்ததாக ஒரு பொய் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. டெல்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஷஹின் பாக் பகுதி வேட்பாளர் அமானதுல்லா கான் 72 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் ட்விட்டரில், “நான் 72000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்….

மேலும்...

முஸ்லிம்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் – பாஜக எச்சரிக்கை!

புதுடெல்லி (08 பிப் 2020): முஸ்லிம்கள் அவர்களது ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் முஸ்லிம் பெண்கள் கையில் வாக்காளர் அட்டையுடன் நிற்கும் வீடியோவை பதிவிட்டு, ‘நீங்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் இது மீண்டும் தேவைப்படும்’ என்பதாக வெறுப்பூட்டும் பதிவை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது. நாடெங்கும் சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பி ஆகியவற்றிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்…

மேலும்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக!

சென்னை (28 ஜன 2020): தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது பதிந்துவிட்டு பின்பு நீக்கம் செய்வது வாடிக்கை. அந்த வகையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குறித்த ஒரு பதிவை பதிந்துவிட்டு தற்போது நீக்கம் செய்துள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் கடந்த ஐந்து மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும்…

மேலும்...