தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னை (15 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாணியது பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதைக் காண…

மேலும்...

டெல்லியை மிஞ்சிய தமிழகம் – கொரோனா பாதிப்பில் மூன்றாமிடம்!

சென்னை (11 மே 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, 7 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. நேற்று புதியதாக 669 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. புதியதாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 47 பேர் தமிழகத்தில் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இன்று மட்டும் 135 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,959 பேர் கொரோனா தொற்றிலிருந்து…

மேலும்...

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு – எந்தெந்த கடைகள் செயல்படலாம்? – முழு விளக்கம்!

சென்னை (10 மே 2020): கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை முதல் 34 வகையான கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு திறக்க அனுமதித்த கடைகளின் விவரம் வருமாறு: டீக்கடைகள் (பார்சல் மட்டும்) பேக்கரிகள் (பார்சல் மட்டும்) உணவகங்கள் (பார்சல் மட்டும்) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்குக் கடைகள் கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள் சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள் மின்…

மேலும்...

சென்னையில் முக்கிய நபர்களை தாக்கும் கொரோனா – தொடர் அதிர்ச்சி!

சென்னை (08 மே 2020): சென்னையில் முதன்மை பணியாளர்களை கொரோனா தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி வரும் முதன்மை பணியாளர்களான டாக்டர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் உருவான பரபரப்பு அடங்குவதற்குள், மின் வாரியத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழக மின்வாரியத்துறை இஞ்ஜினியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்கள் துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த…

மேலும்...

டாஸ்மாக் கொடுமை – முதல்வர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலம் (08 மே 2020): சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் டோக்கன் பள்ளியில் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றுவரை அமலில் இருக்கும் நிலையில், நேற்று முதல் சாராய வியாபாரம், டாஸ்மாக் அமோகமாக நடைபெற்று வருகிறது. மது பிரியர்கள் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குடிகாரர்களுக்கு,…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (07 மே 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இது தமிழகத்திலும் அதன் வீரியத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் புதன் கிழமை மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 771 பேரில் 575 பேர் ஆண்கள், 196 பேர் பெண்கள் ஆவர்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த…

மேலும்...

மே 7ஆ, தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படுமா?

சென்னை (05 மே 2020): தமிழகத்தில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அன்று கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் வரும் 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது….

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (04 மே 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,409 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று மட்டும் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கும் கடலூரில் 122 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில்…

மேலும்...

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

சென்னை (02 மே 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,757 அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் இன்றுவரை 1,341…

மேலும்...

தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு!

சென்னை (01 மே 2020): தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 3-ம் தேதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று, இதுவரை இல்லாத அளவாக 161 பேருக்கு வைரஸ்…

மேலும்...