பட்டா மாற்றம் செய்ய இனி தாலுக்கா அலுவலகம் செல்ல தேவையில்லை!

சென்னை (10 பிப் 2020): “பட்டா மாற்றம் செய்ய இனி தாலுக்கா அலுவலகம் சென்று அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை!” என்று வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களிடம் அளிக்கப்படுகிறது. அதை வைத்து பொதுமக்கள் பட்டா பெயர் மாறுதல்…

மேலும்...

தர்பார் தோல்விக்கு அரசு உதவும் – பரபரப்பை ஏற்படுத்தும் அமைச்சர்!

சென்னை (04 பிப் 2020): தர்பார் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பெரிய நடிகர்கல் நடிக்கும் திரைப்படங்களின் டிக்கெட் தொகை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் திரைத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ…

மேலும்...

முதலில் அறிக்கை பின்பு மறுப்பு – மீண்டும் தமிழக அரசின் குளறுபடி!

சென்னை (29 ஜன 2020): பொதுத் தேர்வை முன்னிட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினம் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அடிப்படையில் இதுவரை பள்ளிகள் நடைபெற்று வந்தனர். ஆனால் மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும்…

மேலும்...

வயிறு எரியுது – ராமதாஸ் வேதனை!

சென்னை (21 ஜன 2020): பொங்கல் அன்று மது விற்பனை 605 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை நினைத்து தனது “வயிறு எரிவதாக” பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும்….

மேலும்...

இவ்வருட பொங்கலுக்கு செம்ம பிஸினஸ் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை சுமார் 606 கோடி ரூபாய் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் ரூ.500 கோடி வரை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகியுள்ளது….

மேலும்...

மிரட்டிய ஸ்டாலின் – பணிந்த எடப்பாடி!

சென்னை (16 ஜன 2020): இவ்வருடம் பெரியார் விருது இதுவரை அறிவிக்காதது காரணம் ஏன்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் உடனே பெரியார் விருதை அறிவித்துள்ளது தமிழக அரசு. தந்தை பெரியார் விருது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (புதன்கிழமை) மாலை சமூக வலைதலங்களில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது 2019, யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன், சொந்தக்…

மேலும்...