தமிழ் நாட்டில் தொடர் மின்வெட்டு – அமைச்சர் செந்தில் பாலாஜி செய்வது இதுதான்!

சென்னை (22 ஜூன் 2021): திமுக அரியணையில் அமர்ந்த ஒரு வாரத்திலேயே மின்வெட்டு புகார்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. எல்லாவற்றையும் ஓரளவுக்கு மேனேஜ் செய்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு மின்வெட்டு பிரச்னை பெரிய தலைவலியாக உள்ளது. இச்சூழலில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும், தாங்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டனர். மேலும் குறைகளையும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இந்தத் தீர்மானத்தின் போது பேசிய…

மேலும்...

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் – முழு விவரம்!

சென்னை (20 ஜூன் 2021): இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் அனைத்து வகை கடைகள் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத நபர்களுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்க அனுமதி…

மேலும்...

துபாயில் கொரோனாவுக்கு தாயை பறிகொடுத்து தனியே தமிழ்நாடு வந்த கைக்குழந்தை!

திருச்சி (18 ஜுன் 2021): துபாயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாய் உயிரிழந்த நிலையில், அவருடன் வசித்த குழந்தை நேற்று திருச்சி வந்தடைந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலன் (38) – பாரதி (38) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இதில், முதல் குழந்தை நுரையீரல் கோளாறு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டது. குடும்ப வறுமை காரணமாக தவித்துவந்த நிலையில், கடந்த மார்ச்…

மேலும்...

தமிழ் நாட்டில் நீட் தேர்வு வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர் தகவல்!

சென்னை (07 ஜூன் 2021): தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் நடத்தக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், நீட் தேர்வு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆன்லைன்…

மேலும்...

பட்டையை கிளப்பும் ஸ்ரீகிருஷ்ணா மாட்டிறைச்சி கடை!

சென்னை (13 ஜன 2021): மாட்டிறைச்சியை வைத்து சங் பரிவார் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலைகளை அரங்கேற்றி வரும் நிலையில் ஸ்ரீகிருஷ்ணா பீஃப் ஸ்டால் என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் அடங்கிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த கடை எங்கிருக்கிறது? என்பது குறித்து தகவல் இல்லை என்றாலும் கடை கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என அறியப்படுகிறது. அதில் “எங்கள் கடையில் ஹலால் செய்யப்பட மாட்டிறைச்சி கிடைக்கும்” என்கிற வாசகத்துடன் அனைத்து மத புகைப்படங்களும்,…

மேலும்...