தோஹா-திருச்சி நேரடி விமானச்சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

தோஹா (12 பிப்ரவரி 2020): கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவையின்றி இதுநாள் வரை பெரும் அவதியில் இருந்த பயணிகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பட்ஜெட் விமானம், தோஹா-திருச்சி வழித்தடத்தில் தனது புதிய சேவையைத் துவக்கி இருக்கிறது. தோஹாவிலிருந்து திருச்சிக்கு நேரடி விமானச் சேவை இல்லாத காரணத்தால் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இவர்கள் முறையே, தோஹா – சென்னை,…

மேலும்...

திருச்சி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

திருச்சி (30 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி கொலை வழக்கின் திடீர் திருப்பமாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல்…

மேலும்...

மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை!

திருச்சி (30 ஜன 2020): திருச்சியில் மருத்துவர் ஒருவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தென்னூர் பகுதியில் மிகப் பிரபலமான மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக இருப்பவர் சரவணன். கடந்த 26 ஆம் தேதி சரவணன் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்தார். அப்போது மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள அறைக்குச் சென்று அவர் திடீரென தனது இடது கையில் மயக்க ஊசி அதிக அளவில் போட்டுக்கொண்டார்….

மேலும்...

திருச்சி பாஜக நிர்வாகி கொலையின் பின்னணியில் மதம் காரணமல்ல – காவல்துறை!

திருச்சி (27 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு படுகொலையின் பின்னணியில் மத பிரச்சனை காரணம் அல்ல என்று மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள்…

மேலும்...

பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை -திருச்சியில் பரபரப்பு!

திருச்சி (27 ஜன 2020): திருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் இன்று (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் தப்பிவிட்டது. அவரது…

மேலும்...

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு நீதிபதி வழங்கிய வேற லெவல் தண்டனை!

திருச்சி (24 ஜன 2020): திருச்சியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு நீதிபதி புதுவிதமான தண்டனை வழங்கி உத்தரவிட்டார். திருச்சி கே.கே நகரைச் சேர்ந்த பாலமுருகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் ஐந்து பேருடன் மதுபோதையில் வாகனத்தை ஓட்டினார். இவரை போக்குவரத்து போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அபராதமும் விதித்தனர். 2018-ஆம் ஆண்டு பாலமுருகனுக்கு 17 வயது என்பதால் இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பயிற்சி வகுப்பில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டது….

மேலும்...

திருச்சியில் பரபரப்பு – நகைக்கடை அதிபர் வீட்டில் நடந்த கொடூரம்!

பட்டுக்கோட்டை (14 ஜன 2020): திருச்சியில் நகைக்கடை அதிபர் தனது இரு மகன்கள், மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஊரணிபுரம் வெட்டுவாக்கோட்டை கே.ஆா். அம்சவள்ளியம்மாள் காலனியைச் சோ்ந்த முருகேசன் மகன் செல்வராஜ் (45). ஊரணிபுரத்தில் நகைக்கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி செல்லம் (43), மகன்கள் நிகில் (20), முகில் (14). இவா்களில் நிகில் மூளை வளா்ச்சிக்…

மேலும்...

300 க்கும் அதிகமான சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது!

திருச்சி (03 ஜன 2020): தமிழகம் மற்றும் கேரளாவில் 300 க்கும் அதிகமான சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் 300-க்கும் அதிகமான செயின் பறிப்பு குற்றங்கள் செய்துள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு…

மேலும்...