நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல – திருமாவளவன் விளக்கம்!

சென்னை (14 மார்ச் 2021): நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கட்சி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் ‘தென்னிந்தியா 2021’ என்கிற பெயரில் அரசியல் கருத்தரங்கு நிகழ்வை நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “ஒரே நாடு; ஒரே கலாச்சாரம் என்பதே பா.ஜ.க-வுடைய தேசியவாதம். இந்த ஒற்றைக் கலாச்சார பிரச்சாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பன்மைத்துவத்திற்கு எதிரானது. நாங்கள் இந்துக்களுக்கு…

மேலும்...

பாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்!

கேளம்பாக்கம் (27 அக் 2020): நான் பாஜக சார்பில் போராட வரவில்லை என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். . விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை எதிர்த்து போராட்டம் நடத்திய குஷ்பூ இன்று காலை கைது செய்யப்பட்டார் பின்பு மாலை விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் கேளம்பாக்கத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; “தேர்தல் சமயத்தில் மட்டுமே சிலர் கோவில்களுக்கு செல்கின்றனர். பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம்…

மேலும்...

நடிகை குஷ்பூ கைது!

சிதம்பரம் (27 அக் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில்,  தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது.

மேலும்...

பெண்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

சென்னை (24 அக் 2020): பெண்கள் எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாக பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன், தான் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்துவதும்…

மேலும்...

விஜய் சேதுபதிக்கு அவமானம் – திருமாவளவன் கருத்து!

சென்னை (19 அக் 2020) : 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேயற்றப்பட்டுள்ளார் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “விஜய் சேதுபதி தமிழினத்தின் கோரிக்கையைப் புறந்தள்ளினார். மு.முரளிதரன் விஜய்சேதுபதியைப் புறந்தள்ளினார். அவர் ‘800’ படத்தில் நடிப்பதிலிருந்து வெளியேறவில்லை; வெளியேற்றப்பட்டார். அவர்,மகிழ்ச்சியாய் அல்ல; விரக்தியாய் “நன்றிவணக்கம்” என்கிறார். இது அவருக்குநேர்ந்த அவமதிப்பு. என்று திருமா தெரிவித்துள்ளார்.

மேலும்...

தடுமாறிய திருமாவளவன் தன்னிலை விளக்கம்!

சென்னை (02 அக் 2020): இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தற்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்,. இதற்கு இரங்கல் தெரிவித்த திருமாவளவன் அவரது பதிவில், “இந்து முன்னணி தலைவர் பெரியவர் இராம.கோபாலன் அவர்களின் மறைவுக்காக வருந்துகிறோம். இந்துக்களின் நலன்களுக்காகக் குரல் கொடுத்தவர். கருத்து முரண் இருந்தாலும் எம்மீது வெறுப்பைக் காட்டாதவர். அரசியல் கணக்குகளுக்காக அவதூறுகளைப்…

மேலும்...

திருமாவளனின் மூத்த சகோதரி கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (05 ஆக 2020): கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி உயிரிழந்தார். பானுமதிக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பானுமதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பானுமதி, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இந்த செய்தி விடுதலை சிறுத்தைகள்…

மேலும்...

அதிர்ச்சி அளிக்கும் தமிழக அரசின் முடிவு – திருமாவளவன் கருத்து!

சென்னை (03 ஆக 2020): மும்மொழிக் கொள்கையை ஏற்காதது குறித்து முடிவெடுத்த தமிழக அமைச்சரவையின் முடிவை வரவேற்றுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை முடிவெடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக,தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மும்மொழிக்_கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதை விசிக சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறோம். அதே வேளையில், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில்…

மேலும்...

குடியரசுத் தலைவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணை தேவை – பகீர் கிளப்பும் திருமாவளவன்!

சென்னை (25 மே 2020): குடியரசுத் தலைவரை ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தது குறித்து உச்ச நீதிமன்ற விசாரணை நடத்தப்படுமா? என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார். அப்போது இவ்விவகாரம் ஜாதிய ரீதியிலான துன்புறுத்தல்…

மேலும்...

தமிழக பாஜக தலைவராக தலித்தை நியமித்தது ஏன்? – திருமாவளவன் பகீர் கேள்வி!

சென்னை (23 மே 2020): தமிழக பாஜக தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த முருகனை நியமித்தது ஏன்? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலித் சமூக மக்களுக்காக போராடி வருவது அனைவரும் அறிந்ததே. சமீபகாலமாக திமுக தலைவர்கள் பேசும் சில பேச்சுக்கள் தலித் சமூகத்தினரின் மனம் நோகும்படி உள்ளது. இந்நிலையில்தான் தலித் சமூகத்தினரை இழிவாகப் பேசியதாக கூறி திமுக ஆர்.எஸ் பாரதி சனிக்கிழமை அன்று கைதாகி…

மேலும்...