கொரோனா பாதிப்பால் கீழக்கரையை சேர்ந்தவர் சென்னையில் மரணம்!

சென்னை (05 ஏப் 2020): கொரோனாவுக்கு தமிழகத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் 3000 த்திற்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இதில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்…

மேலும்...

கொரோனாவால் பரிதவித்த 289 பயணிகள் – கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

கொச்சி (15 மார்ச் 2020): இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொச்சி விமான நிலையத்தில் அனைத்து பயணிகளும் எமிரேட்ஸ் விமானத்திலிருந்து வெளியெற்றப்பட்டனர். கொரோனா பீதி உலகையே அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதலாவதாக கொரோனா பாதித்த மாநிலம் கேரளா. இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 289 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த 19 பேர் கொண்ட…

மேலும்...

கத்தார் மற்றும் துபாயிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாசிடிவ்!

திருவனந்தபுரம் (12 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிக அளவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் கேரளத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 19…

மேலும்...

துபாயிலிருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): டெல்லி மற்றும் தெலங்கானாவில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்கனவே, கேரளாவில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது டெல்லி மற்றும் தெலங்கானாவுக்கு தலா ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கரோனா பாதித்த இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவரும் தீவிர மருத்துவக்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (09 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப் பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஆரோக்கிய அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் (UAE Ministry of Health and Prevention (MoHAP)) ஏற்கனவே ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆக இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்தாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

அபுதாபி (03 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சீனாவின் வுஹானிலிருந்து வந்த சீன நாட்டினை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுவதாக ஐக்கிய அரபு அமீரக மருத்துவ துறை அதிகாரி டாக்டர் ஹுசைன் அல் ரான்ட் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே நான்கு சீன நாட்டினருக்கு…

மேலும்...

துபாயில் கொரோனா வைரஸ் குறித்த வதந்தி – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

துபாய் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் குறித்து வதந்தி கிளப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என துபாய் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் துபாய் குறித்து கரோனா வைரஸ் பாதித்தவர் குறித்த வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது வதந்தி என்று கூறியுள்ள துபாய் போலீஸ் வதந்தி பரப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் பாதித்த சீனாவை சேர்ந்த நான்கு பேர் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (29 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வந்த ஒரெ குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது….

மேலும்...

முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தி சமூக வலைதளங்களில் பதிந்தவர்களுக்கு ரூ 1 கோடி அபராதம்!

துபாய் (20 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களுக்கு அபராதம் மற்றும் நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிந்த மூன்று பேருக்கு தலா 5 லட்சம் திர்ஹம் (இந்திய ரூபாயில் 9,671,125) அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதம் கட்டிய பிறகு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையை…

மேலும்...

துபாய் மக்களுக்கு எச்சரிக்கை!

துபாய் (14 ஜன 2020): துபாயில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. “ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்கும் மழை புதன் கிழமை வரை நீடிக்கும்” என்று துபாய் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை பலத்த மழை பெயத நிலையில் மேலும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மேலும்...