காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாதவர்களின் நிலை!

சென்னை (05 ஜூலை 2020): 10, 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வருகை தரவில்லை என்றால் ஆப்சென்ட் அதாவது தேர்வுக்கு வருகை தரவில்லை என்று பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். கொரோனாவின் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. மேலும் விடுபட்டுப்போன…

மேலும்...

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

சென்னை (09 ஜூன் 2020): எதிர் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் 11 வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதா? அல்லது தேர்வு…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு!

ஐதராபாத் (08 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யகோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், தற்போது தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடத்தாமல் ஏற்கனவே நத்தப்பட்ட உள் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வில் தேர்ச்சி…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு!

சென்னை (08 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின்…

மேலும்...

கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுமா?

சென்னை (07 ஜூன் 2020): கொரோனா அறிகுறி இருந்தால் அந்த மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆசிரிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை அவசியம் என தெரிவித்துள்ளது. பள்ளி நுழைவாயிலேயே அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு 97 டிகிரி வரை வெப்பநிலை…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் 15 முதல் தொடக்கம் – ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு!

சென்னை (03 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜுன் 15 ஆம் தேதி தொடங்க இருப்பதல் ஆசிரியர்கள் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ்…

மேலும்...

தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை!

சென்னை (20 மே 2020): தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறக்‍கப்பட்டவுடன் தேர்வை நடத்தப்போவதாக அறிவித்திருக்‍கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக பள்ளிகளுக்‍கு விடுமுறை அறிவிக்‍கப்பட்டு, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு நடத்த முடியாத நிலையில், அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு…

மேலும்...

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு – புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சென்னை (19 மே 2020): தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக மே 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி 10ம் வகுப்பு…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை (12 மே 2020): கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ், காரணமாக தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. ஏற்கனவே 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியிருந்த நிலையில், இறுதி பாடத்தின் போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? நடக்காதா? – தமிழக கல்வித்துறை அமைச்சர் தகவல்!

சென்னை (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என தமிழக அரசு முன்னமே அறிவித்துள்ளது. இதனிடையே 10ம் வகுப்புகளுக்கு தேர்வு ஒத்தி வைக்கப்படுமா என்ற எண்ணம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளி…

மேலும்...