ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த தமிமுன் அன்சாரி புது ஐடியா!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்த மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி யோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்கும் முடிவை முதல்வர் அறிவித்தார். தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஓயாத…

மேலும்...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முழு தேர்ச்சி! – முதல்வர் உத்தரவு!

சென்னை (25 மார்ச் 2020): தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் முழு தேர்ச்சி அடைவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு அனைத்துத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் 1 ஆம் வகுப்பு முதல்…

மேலும்...

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பு!

சென்னை (21 மார்ச் 2020): தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா பாதிப்பு எதிரொலியாக, தற்போது 9ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 27ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், அதனை ஒத்திவைக்க வேண்டும் என எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேரவையில் இன்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 10ஆம் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக…

மேலும்...

பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் 20-ல் திட்டமிட்டபடி தொடங்கும் – பள்ளி கல்வித்துறை!

சென்னை (20 மார்ச் 2020): பிளஸ் டூ பொதுத் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 20 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வில் மாற்றம் எதுவும் வரலாம் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் திட்டமிட்ட படி நாளை(மார்ச்-20) பிளஸ் 2 பொது தேர்வுகள் நடத்தப்படும். மேலும்…

மேலும்...

105 வயதில் தேர்வில் வெற்றி பெற்று சாதித்த பாட்டி!

கொல்லம் (06 பிப் 2020): கேரளாவில் 105 பாட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதித்து பலரது பாராட்டை பெற்றுள்ளார். கேரளாவில் எழுத்தறிவற்ற முதியவர்களுக்கு கல்வி போதிக்கும் பணிகளை மாநில எழுத்தறிவு இயக்கம் தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் படித்து வருவோருக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கொல்லத்தை சேர்ந்த பகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வில்…

மேலும்...

ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது குழந்தைகளுக்கு காத்திருக்கும் கொடுமைகள்!

சென்னை (30 ஜன 2020): ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்ட நிலையில் அவர்கள் பல ஆவணங்களை சமர்ப்பித்தால்தான் தேர்வு எழுத முடியுமாம். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்டதிலிருந்தே மாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில், தேர்வு எழுத வரும் மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,…

மேலும்...

மாணவர்களுக்கு சங்கு ஊதும் தேர்வு முறை – செங்கோட்டையனின் பதில்!

சென்னை (26 ஜன 2020):5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு வைப்பது குறித்த கேள்விக்கு எ.கே.ஜி மாணவர்களுக்கே நுழைவு தேர்வு வைக்கபடுகிறது என்று பதிலளித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 5 மற்றும் 8ம் வகுப்பு பள்ளிக்குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்து பெற்றோர்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது அரசு. இதனால் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,…

மேலும்...

5 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு குறித்து வெளியான தகவல் வெறும் வதந்தி – அமைச்சர் விளக்கம்!

கோபிச்செட்டிபாளையம் (19 ஜன 2020): 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வேறு மையங்களில் நடைபெறும் என்று பரவும் தகவல் வதந்திதான் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில் குத்துவிளக்கு ஏற்றியும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தாா். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல் மாற்று…

மேலும்...