தொடரும் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் – இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

புதுடெல்லி (28 ஜன 2020): கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகிக் கொண்டுள்ள நிலையில் சீன நகரமான வூஹானில் இருந்து 250 க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய்…

மேலும்...

கொரோனா வைரஸ் குறித்த பரபரப்பு படத்தை வெளியிட்ட சீனா!

பீஜிங் (28 ஜன 2020): சீனாவில் பரவி வரும் வைரஸ் நோய் குறித்த பரபரப்பு படத்தை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 81 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 2800 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது…

மேலும்...

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

பீஜிங் (25 ஜன 2020): சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு!

பீஜிங் (24 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்,…

மேலும்...

காஷ்மீரில் நான்கு ராணுவ வீரர்கள் பலி!

ஸ்ரீநகர் (15 ஜன 2020): காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அங்கு பல மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படுகிறது. குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம், பனிச்சரிவில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. ஒரு வீரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நவுகாம் செக்டார் பகுதியில்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் நடந்தது என்ன? – மழுப்பும் காவல்துறை!

மீரட் (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்து போலீசார் சரியான தகவல் சொல்லவில்லை என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மீரட் நகரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, இதுவரை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலேயே பலர் கொல்லப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டத்தை கலைப்பதற்காக காவலர்கள்…

மேலும்...