பாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி உட்பட மூன்று வீரர்களுக்கு கொரோனா பாஸிட்டிவ்!

இஸ்லாமாபாத் (13 ஜூன் 2020): பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி உட்பட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அஃப்ரிடி அவரது ட்விட்டரில் இட்டுள்ள பதிவில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. என் உடலில் வலி அதிகரிப்பதை உணர்ந்தேன். நான் பரிசோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்வசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை தேவை“ என்று பதிவிட்டுள்ளார். I’ve been feeling unwell since…

மேலும்...

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு!

ராவல்பிண்டி(13 ஜூன் 2020): பாகிஸ்தான் ராவல்பிண்டியில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளார். பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கபரி பஜாரில் சில மர்மநபர்கள் வெடிகுண்டை வீசிச் சென்றனர். அந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். புலனாய்வு குழுக்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அப்பகுதியிலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் சிஜிதுல் ஹாசன் தெரிவித்தார். இந்த தாக்குதலில் மூடப்பட்ட கட்டிடம்…

மேலும்...

ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் கைது!

புதுடெல்லி (09 ஜூன் 2020): ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகளை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 29 வயதான விகாஸ் குமார் மற்றும் 22 வயதான சிமன் லால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதான இருவரில் விகாஸ் குமார் ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் முழுநேர பணியாளராகவும், சிமன் லால் பிகானீரில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் மையத்தில் ஒப்பந்த பணியாளராகவும் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது மேலும் பாகிஸ்தானின் முல்தானில் இருந்து இயங்கும்…

மேலும்...

பாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)

ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கராச்சியின் மாடல் காலனியில் நேற்று மாலை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம் 99 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கியது. விமான நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் கூட இல்லாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர், அதேவேளை 82 பேர் உயிரிழந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...

பாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் – வீடியோ!

கராச்சி (22 மே 2020): பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்‍கு உள்ளானதில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. விமானம் தரையிறங்கியபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் 57 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இருவர் உயிர்…

மேலும்...

BREAKING: பாகிஸ்தான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

கராச்சி (22 மே 2020): பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்‍கு உள்ளானதில், அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப் படுகிறது. பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. விமானம் தரையிறங்கியபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப்படுகிறது. பயணிகள்…

மேலும்...

இந்து கோவிலில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய முஸ்லிம் கிரிக்கெட் வீரர்!

இஸ்லாமாபாத் (15 மே 2020): பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி லாக்டவுன் காலத்தில் இந்து கோவில்களில் ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தார். தனது நிவாரணப் பணிகளின் புகைப்படங்களைப் சமூக வலைதலங்களில் பகிர்ந்து கொண்டுள்ள அப்ரிடி, , “நாங்கள் கொரோனாவை ஒழிப்பதில் ஒன்றாக இருக்கிறோம், அதேபோலை இதில் ஒன்றாகவே வெற்றி பெறுவோம். ஒற்றுமை எங்கள் பலம். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக ஸ்ரீ லட்சுமி நரேன் கோவிலுக்குச் சென்று உதவினேன்” என்று தெரிவித்துள்ளார். அப்ரிடியின்…

மேலும்...

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக விமானப் படைக்கு இந்து விமானி தேர்வு!

இஸ்லாமாபாத் (04 மே 2020): பாகிஸ்தான் வரலாற்றில் விமானப்படைக்கு முதல் இந்து விமானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகானம் தர்பார்க்கார் பகுதியை சேர்ந்த ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தானின் முதல் இந்து விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் அனைத்து இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி தெரிவிக்கையில் தேவின் நியமனம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலர் சிவில் சேவையிலும் இராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர். பல மருத்துவர்களும் இந்து சமூகத்தைச்…

மேலும்...

ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம்!

ஜம்மு (03 மே 2020): ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற பகுதியில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்….

மேலும்...

இந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்!

இஸ்லாமாபாத் (23 ஏப் 2020): இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடவில்லை, அவர்களின் சாதனைக்காக விளையாடினார்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களை சீண்டியுள்ளார். பாகிஸ்தானின் அதிரடி வீரராக இருந்தவர் இன்ஸமாமுல் ஹக், தற்போது பாகிஸ்தான் தேர்வுக் குழு தலைவராக உள்ளார். இவரும் முன்னாள் விரர் ரமீஸ் ராஜாவும் பாகிஸ்தானின் யூடுப் சேனல் ஒன்றின் டாக்‌ஷோவில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இன்சமாமுல் ஹக், “தற்போதைய பாகிஸ்தான் அணி வீரர்கள் இயல்பாகவே திறன் பெற்றிருந்தாலும் சில சமயம்…

மேலும்...