குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (11 ஜன 2020): தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கிய…

மேலும்...

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் இவர்தானம்!

சென்னை (09 ஜன 2020): தமிழக பாஜக தலைவராக அதிக வாய்ப்பு மஹாலக்ஷ்மிக்கே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பா.ஜ.க-வுக்கு அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளவர் என்று சிலரின் பெயர்களை அவ்வப்போது பா.ஜ.க-விலுள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் பரப்பி வருகின்றனர். ஆனால், `அவர்களெல்லாம் கிடையாது. அடுத்து தலைவராகப் போகிறவர் எங்கள் அக்காதான்’ என்கிறார்கள் மஹாலக்ஷ்மியின் ஆதரவாளர்கள். “பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். பல மொழிகள் தெரியும். இவர் படிக்காத படிப்பே இல்லை,…

மேலும்...

மோடியின் தொகுதியான வாரணாசியில் ஏபிவி படுதோல்வி!

வாரணாசி (09 ஜன 2020): வாரணாசியில் உள்ள சம்பூர்ணனந்தா சமஸ்கிருத விஷ்வவைத்யாலயா என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஏ.பி.வி.பி அணியை தோற்கடித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஜன.,5ம் தேதி ஏ.பி.வி.பி கும்பல் மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஏ.பி.வி.பி அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில்…

மேலும்...

எச்.ராஜா பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடுங்கோபத்தில் அமித் ஷா!

புதுடெல்லி (09 ஜன 2020): காமெடி பீசாக இருந்து கொண்டு கட்சி பெயரை கெடுக்கிறார்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச் ராஜா மீது அமித் ஷா கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி எச் ராஜா தலைமையில் சமீபத்தில் சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியது பாஜக. இந்த போராட்டத்தில் சொற்ப ஆட்களே கலந்து கொண்டனர். இது பாஜக தலைமையை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா,…

மேலும்...

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக பழி வாங்கப்படுகிறாரா தீபிகா படுகோன்?

மும்பை (09 ஜன 2020): தீபிகா படுகோன் நடித்த சபாக் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் சபாக். ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சமீபத்தில் தனது ட்ரைலரினை வெளியிட்டது. மேலும் இத்திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக…

மேலும்...

தீபிகா படுகோன் படத்திற்கு இலவச விளம்பரம் செய்யும் பாஜக!

மும்பை (09 ஜன 2020): நடிகை தீபிகா படுகோன் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோன் போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீபிகா படுகோன் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் தாஜேந்தர் பால் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக எதை எதிர்த்தாலும் அது விளம்பரமாக அமைந்து எதிர் தரப்புக்கு…

மேலும்...

முஸ்லிமாக மாறத் தயார் – நடிகர் ராதாரவி!

சென்னை (08 ஜன 2020): குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தால் நான் முஸ்லிமாகவே மாற தயாராக உள்ளேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். அவ்வப்போது சுயநலத்திற்காக கட்சி தாவும் ராதாரவி, திராவிட பாரம்பர்ய கொள்கையை அடகு வைத்து பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் பேசிய ராதாரவி , “நான் இவ்வளவு நாட்களாக ஏமாற்று கூட்டத்தில் இருந்தேன், இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுள்ளேன். குடியுரிமை சட்டத்தை…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி – அதிர்ச்சியில் பாஜக!

நாக்பூர் (08 ஜன 2020): நாக்பூரில் பாஜக ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அடுத்த அதிர்ச்சியாக மாவட்ட அளவிலான தேர்தலில் (zilla parishad) காங்கிரஸ், கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜில்லா பரிசத் தேர்தலில், காங்கிரஸ் 31 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 11 மற்றும் சிவசேனா 1 இடத்தையும் கைபற்றியுள்ளது பாஜக 15 இடங்களை மட்டுமே கைபற்றியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையகமான நாக்பூரில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது பாஜக மற்றும் ஆர் எஸ். எஸ்ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

சிறையில் ஆண் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டேன் – பெண் சமூக ஆர்வலர் சதாஃப் ஜாஃபர்!

லக்னோ (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைதாகி ஜாமீனில் வெளியாகியுள்ளார் சமூக ஆர்வலரும் காங்கிரஸ் பிரமுகருமான சதாஃப் ஜாஃபர். அவருக்கு சிறையில் நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். குறிப்பாக, ” நான் பாகிஸ்தானி என்று அழைக்கப் பட்டு ஆண் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். சூ கால்கலால் உதைக்கப் பட்டேன். என்னைப் போன்று பல அப்பாவிகளுக்கு இந்த கொடுமைதான் நடக்கிறது. இத்தனைக்கும் அது மகளிர் காவல் நிலையம். அங்கு ஆண் காவலர்களின் ஆதிக்கம்…

மேலும்...

என்னடா கொடுமை இது – தாக்கியவர்களை விட்டுவிட்டு அடி வாங்கியவர்கள் மீது வழக்கு!

புதுடெல்லி (07 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவசங்க தலைவி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ABVB துணையுடன் இந்த பயங்கரம் நடத்தப்பட்டு…

மேலும்...