பீகார்: வெற்றி பெற்றவர்களை தோற்றதாக அறிவித்ததாக தேஜஸ்வி குற்றச்சாட்டு!

பாட்னா (11 நவ 2020): பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் கடைசி நேர பரபரப்பிற்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது,. மூன்று கட்டமாக பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பெரும் குளறுபடிகள் நடந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதில், பாஜ நிதிஷ் கூட்டணி முன்னிலை பெற்றாலும், இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி…

மேலும்...

பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக்கிங் – புஷ்பம் பிரியா புகார்!

பாட்னா (10 நவ 2020): பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி தெரிவித்துள்ளார். பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் . இந்நிலையில் பாரதீய ஜனதா தேர்தலை நாசப்படுத்தியதாக புஷ்பம் பிரியா கூறினார். அனைத்து சாவடிகளிலும் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “தனது கட்சிக்கு விழுந்த வாக்குகள் மோசடி…

மேலும்...

பீகாரில் அசாதுத்தீன் உவைசியின் AIMIM கட்சி மூன்று இடங்களில் முன்னிலை!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உவைசியின் (AIMIM) கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி…

மேலும்...

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய பீகார் தேர்தல் முடிவுகள்!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும்,…

மேலும்...

முதல்வர் மீது வெங்காய வீச்சு!

பாட்னா (03 நவ 2020): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன்…

மேலும்...

பாஜகவுடன் நிதிஷ் கூட்டணி முறிவு – பகீர் கிளப்பும் சிராக் பாஸ்வான்!

பாட்னா (02 நவ 2020): பா.ஜ.க. கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விரைவில் விலகுவார் என்று லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். பீகாரில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவருமான சிராக் பாஸ்வான், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் நேரத்துக்கு நேரம் தன் நிலையை மாற்றும் மனநிலை கொண்டவர்….

மேலும்...

பிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர் தகவல்!

மும்பை (30 அக் 2020): பிகார் தேர்தல் பரபரப்பின் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகை அமீமிஷா படேல் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் நடிகை அமீஷா தெரிவித்துள்ளதாவது: லோக் ஜான்ஷக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் சார்பில் தனக்குச் சொல்லப்பட்டதை மட்டுமே சொல்லவும் செயல்படவும் நிர்பந்திக்கப்பட்டேன். ஒருவேளை அதனை மறுத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் உணர்கிறேன். நான் மும்பை வந்து சேரும் வரை பாதுகாப்பற்ற…

மேலும்...

மணமகன் மரணம் – திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று!

பாட்னா (30 ஜூன் 2020): பீகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹாரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் கொரோனா அறிகுறியுடன் இருந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஜூன் 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த இரண்டு…

மேலும்...

சீன ஒப்பந்தம் ரத்து – பீகார் அரசு அதிரடி உத்தரவு!

பாட்னா(29 ஜூன் 2020): சீன நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ரூ.2,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பீகார் மாநில அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. எல்லையில் வாலாட்டிக்கொண்டிருக்கும் சீன ராணுவம், சமீபத்தில் பெரும் மோதலை நடத்தியது. 20 இந்திய வீரர்கள் இறந்தனர்; பதிலடியில் 30 சீன ஜவான்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மக்களை கொந்தளிக்க செய்தது. இதனையடுத்து, சீனப் பொருட்களை புறக்கணிக்குமாறு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் சிலர் நோ சீனா பொருட்கள் ஆதரவாக கருத்து…

மேலும்...

பீகார் மின்னல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு!

பாட்னா (26 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி இறந்தனர். மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்தது. 30 பேர் இந்நிலையில் மின்னல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்...