பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலி!

பாட்னா (25 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரின் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நவாடா மாவட்டத்தில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேரும்,தர்பங்கா,…

மேலும்...

பீகாரில் 32 இடங்களில் போட்டியிடும் அசாதுத்தீன் உவைசி கட்சி!

ஐதராபாத் (10 ஜூன் 2020): ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி தலைமையிலான AIMIM கட்சி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களுக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது. AIMIM கட்சி பீகார் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் கிஷன்கஞ்ச் தொகுதியை வென்ற கம்ருல் ஹுதா என்ற எம்.எல்.ஏ. வை தொடர்ந்து பீகாரில் மேலும் கட்சியை விரிவு படுத்த உவைசி கட்சி முன்வந்துள்ளது. இதுகுறித்து பீகார் எய்ஐஎம் தலைவர்…

மேலும்...

கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை!

பாட்னா (09 ஏப் 2020): கொரோனா வைரஸ் தனிமை வார்டில் இருந்த பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் கயா மாவட்டத்தில் வசிக்கும் 25 வயது பெண் ஒருவர் பஞ்சாபிலிருந்து திரும்பியிருந்தார். அவர் பஞ்சாபின் லூதியானாவில் இரண்டு மாத கர்ப்பினியாகவும் இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென குழந்தை கலைந்து விட்டது. உடனே மருத்துவர்களின் பரிந்துரைப்படி பஞ்சாபில் D and C செய்யப்பட்டது. அதன் பின்பு பீகாருக்கு திரும்பியிருந்தார். ஆனால் அவருக்கு இரத்தப் போக்கு…

மேலும்...

சீனாவிலிருந்து வந்த இந்தியப் பெண்ணுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு!

பாட்னா (27 ஜன 2020): சீனாவில் இருந்து இந்தியா வந்த 29 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் பாட்னா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஏக்தா குமாரி. இவர், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள டியான்ஸின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி தொடர்பாக பயின்று வந்தார். சமீபத்தில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ஏக்தாவுக்கு, உடல் ரீதியிலான சிரமங்கள் ஏற்பட்டன. இதனால், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற…

மேலும்...

பீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை!

பாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி பெண்கள் கல்லூரி உள்ளது. அங்கு சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு அறிவிப்பு வெளியானதால், மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிவிப்பில், “முஸ்லிம் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணியக் கூடாது!” என்றும் “மீறினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்!” எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரும் பெண்களின் சரித்திரப் போராட்டம் -வீடியோ!

புதுடெல்லி (19 ஜன 2020): தேசிய கொடியுடனும் தேசிய கீதத்துடனும் டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு ,…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து உபி பீகாரிலும் தொடங்கிய தொடர் போராட்டம்!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை தொடர்ந்து அதே வழியில் உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பொது மக்கள் அமைதி வழி தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில்…

மேலும்...

நிதிஷ்குமார் திடீர் மாற்றம் – பாஜக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்பு!

பாட்னா (13 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளமை பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு உருவெடுத்துள்ளது….

மேலும்...